‘காஷ்மோரா’ சஸ்பென்ஸை உடைத்த விவேக்!

‘காஷ்மோரா’ சஸ்பென்ஸை உடைத்த விவேக்!

செய்திகள் 24-Apr-2015 10:20 AM IST Chandru கருத்துக்கள்

‘என்னை அறிந்தால்’ படத்தில் அஜித்துடன் இணைந்து நடித்த விவேக், அப்படத்திற்காக ‘தல’ ஸ்டைலில் சால்ட் அன்ட் பெப்பர் லுக்கிலேயே நடித்திருந்தார். படத்திற்காகத்தான் அப்படி வலம் வருகிறார் என்று பார்த்தால், படம் முடிந்தபிறகும்கூட அதே ஸ்டைலில் விவேக் சுற்றி வந்தது ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. இதற்கான காரணம் என்ன என்பதை நேற்று நடந்த ‘பாலக்காட்டு மாதவன்’ ஆடியோ வெளியீட்டு விழாவில் விளக்கினார் விவேக்.

‘‘ஆமா... நான் கார்த்தியோட ‘காஷ்மோரா’ படத்தில நடிக்கிறேன். அதுவும் அவருக்கு அப்பாவாக... அதுக்காக வித்தியாசமான கெட்அப் போடணும்னு ஆசைப்பட்டாங்க. அதுவும் மேக்அப் இல்லாம நேச்சுரலா இருக்கணும்னு சொன்னாங்க. அதுனாலதான் இந்த சால்ட் அன்ட் பெப்பர் லுக்!’’ என ‘காஷ்மோரா’ பட சஸ்பென்ஸை உடைத்து ரசிகர்களை சந்தோஷப்படுத்தினார் விவேக்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சொடக்கு ஆடியோ பாடல்


;