விவேக் விழாவில் அனிருத்... ருசிகர காரணம்!

விவேக் விழாவில் அனிருத்... ருசிகர காரணம்!

செய்திகள் 23-Apr-2015 1:59 PM IST Chandru கருத்துக்கள்

விவேக் நாயகனாக நடித்திருக்கும் ‘பாலக்காட்டு மாதவன்’ படத்தின் ஆடியோ வெளியீடு இன்று காலை நடைபெற்றது. இந்த விழாவில் கலந்து கொண்டு நடிகர் சிவகார்த்திகேயனும், இசையமைப்பாளர் அனிருத்தும் ‘பாலக்காட்டு மாதவன்’ படத்தின் ஆடியோ சிடியை வெளியிட்டு சிறப்பித்தார்கள். இந்த விழாவில், தான் கலந்து கொண்டது குறித்துப் பேசிய அனிருத்,

‘‘என் இசையமைப்பில் உருவாகி வெளிவந்த முதல் பாடலான ‘ஒய் திஸ் கொலவெறி’க்கு பிரதமரில் இருந்து சாதராண ரசிகன் வரை அனைவரிடத்தில் இருந்தும் எனக்கு ஏகப்பட்ட பாராட்டுக்களும், வாழ்த்துக்களும் குவிந்திருக்கின்றன. ஆனால், அது எல்லாவற்றிற்கும் மேல் திரையுலகைச் சேர்ந்த ஒருவரிடமிருந்து அந்தப் பாடலுக்காக எனக்கு முதன் முதலாக பாராட்டு கிடைத்ததென்றால் அது விவேக் சாரிடமிருந்துதான். அந்தப் பாராட்டை என்னால் இப்போதும் மறக்க முடியாது. அவர் மேலுள்ள மரியாதையின் காரணமாக இந்த விழாவில் நான் சந்தோஷமாக கலந்துகொண்டேன்!’’ என்று குறிப்பிட்டார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தானா சேர்ந்த கூட்டம் - சொடக்கு பாடல் டீசர்


;