வேந்தர் மூவிஸிடம் கேரள ‘புறம்போக்கு’ உரிமை!

வேந்தர் மூவிஸிடம் கேரள ‘புறம்போக்கு’ உரிமை!

செய்திகள் 23-Apr-2015 1:46 PM IST VRC கருத்துக்கள்

எஸ்.பி.ஜனநாதன் இயக்கத்தில் விஜய்சேதுபதி, ஆர்யா, ஷாம், கார்த்திகா நாயர் ஆகியோர் நடித்திருக்கும் ‘புறம்போக்கு என்கிற பொதுவுடைமை’ படம் வரும் மே 15-ஆம் தேதி உலகமெங்கும் ரிலீசாகிறது. இந்த படத்தை கேரளாவில் விநியோகம் செய்யும் உரிமையை பிரபல நிறுவனமான ‘வேந்தர் மூவிஸ்’ வாங்கியுள்ளது. ஏற்கெனவே ‘வேந்தர் மூவிஸ்’ நிறுவனம் கேரளாவில் பல படங்களை வாங்கி விநியோகம் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. ‘யுடிவி’ நிறுவனத்தின் பிரம்மாண்ட தயாரிப்பான ‘புறம்போக்கு என்கிற பொதுவுடைமை’ படம் கோலிவுட்டிலும், ரசிகர்களிடையேயும் பெரும் எதிர்பார்ப்பை எற்படுத்தியிருப்பதால் இப்படம் நல்ல விலைக்கு பேசப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன் மோஷன் போஸ்டர்


;