இயக்குனர் சமுத்திரக்கனியின் அடுத்தடுத்த திட்டங்கள்!

இயக்குனர் சமுத்திரக்கனியின் அடுத்தடுத்த திட்டங்கள்!

செய்திகள் 23-Apr-2015 1:40 PM IST Chandru கருத்துக்கள்

‘நிமிர்ந்து நில்’ படத்திற்குப் பிறகு மீண்டும் படத்தை இயக்குவதற்கு நேரமில்லாமல் பரபர நடிகனாக சுற்றிக் கொண்டிருக்கிறார் இயக்குனர் சமுத்திரக்கனி. ‘வேலையில்லா பட்டதாரி’யில் தனுஷின் அப்பாவாக நடித்து பெரிய அளவில் வரவேற்பைப் பெற்ற சமுத்திரனியின் கைவசம் இப்போது நடிகராக ஏழெட்டுப் படங்கள். சூர்யாவுக்கு வில்லனாக ‘மாஸ்’ படத்தில், ஏழரை மூக்கன் என வித்தியாச கேரக்டரில் சிவகார்த்திகேயனுடன் ‘ரஜினி முருகன்’ படத்தில், விமலுடன் ‘காவல்’, வெற்றிமாறனுடன் ‘விசாரணை’, அதோடு கொழஞ்சி, காடு, ஆதார் என கோடம்பாக்கத்தின் மோஸ்ட் வான்டட் குணச்சித்திர நடிகர் சமுத்திரக்கனிதான்.

இந்தப் படங்கள் ஒருபுறம் போய்க்கொண்டிருக்க சமுத்திரக்கனி கதையின் நாயகனாக நடித்து வெற்றிபெற்ற ‘சாட்டை’ படத்தின் அடுத்தடுத்த பாகங்களை உருவாக்கும் முயற்சியிலும் இறங்கியிருக்கிறார். ‘சாட்டை’யில் ஆசிரியரைப் பற்றி கதைக்களம் அமைத்ததுபோல் அதன் அடுத்தடுத்த பாகங்களில் அப்பா, மகன், கணவன் என ஒவ்வொரு சமூக உறவையும் மையமாக வைத்து திரைக்கதை அமைக்கவிருக்கிறார்களாம். ‘சாட்டை’ இயக்குனர் அன்பழகனே இந்த அடுத்தடுத்த பாகங்களின் இயக்குனராகத் தொடர்வார் எனத் தெரிகிறது. குறிப்பாக சகாயம் ஐ.ஏ.எஸின் வாழ்க்கையை மையமாக வைத்தும் ஒரு படத்தை இந்த ‘சாட்டை’ தொடர் வரிசையில் உருவாக்கும் திட்டத்தையும் சமுத்திரக்கனி வைத்திருக்கிறாராம்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

கொடிவீரன் - டீசர்


;