‘குட்டி அஜித்’துக்கு பேர் வெச்சாச்சு!

‘குட்டி அஜித்’துக்கு பேர் வெச்சாச்சு!

செய்திகள் 23-Apr-2015 11:50 AM IST Chandru கருத்துக்கள்

அஜித் - ஷாலினி தம்பதிக்கு ஏற்கெனவே 8 வயதில் அனோஷ்கா என்ற மகள் இருக்கிறார். கடந்த மார்ச் 2ஆம் தேதி அஜித் - ஷாலினி தம்பதிக்கு இரண்டாவது வாரிசாக ஆண் குழந்தை பிறந்தது. ‘குட்டி தல’ பிறந்த சந்தோஷத்தை உலகளவில் டிரென்ட் செய்து தங்களது சந்தோஷத்தை வெளிப்படுத்தினார்கள் அஜித் ரசிகர்கள். அப்போதிலிருந்தே அஜித்தின் ஆண் வாரிசுக்கு என்ன பேர் வைப்பார்கள் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்கள். இப்போது அஜித் மகனின் பெயரை வெளியிட்டிருக்கிறார்கள்.

ஆத்விக் அஜித்குமார் என்பதுதான் ‘குட்டி தல’யின் பெயர். ஆத்விக் என்றால் ‘தனித்துவம்’ என அர்த்தமாம். ‘தல’யைப் போல் அவரின் மகனும் தனித்துவமானவராக விளங்கட்டும்... வாழ்த்துக்கள்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

இந்திரஜித் - ட்ரைலர்


;