100வது நாள்.... ‘ஐ’யின் அதுக்கும் மேல...!

100வது நாள்.... ‘ஐ’யின் அதுக்கும் மேல...!

செய்திகள் 23-Apr-2015 11:06 AM IST Chandru கருத்துக்கள்

இப்படி ஒரு வெற்றிக்காகத்தான் தன் உயிரையே பணயமாக வைத்து நடித்தார் ‘சீயான்’ விக்ரம். இரும்பு உடம்பு ஆணழகனாக, ஆளை அசத்தும் மாடலாக, பார்ப்பவர்களைப் பதற வைக்கும் கூன் விழுந்து, தடிப்புகளுடன் கூடிய விகார மனிதனாக என ஒரே படத்தில் பல பரிணாமங்களைக் காட்டினார் விக்ரம். வெறும் மேக்அப்பை மட்டும் போட்டுக் கொண்டு வந்து கேமரா முன்பு நிற்காமல், தன் கேரக்டருக்காக உடல் மெலிந்து, எடை கூடி என அந்தந்த கேரக்டராகவே ‘ஐ’ படத்தில் மாறியிருந்தார்.

இத்தனை கடுமையான உழைப்புக்கான பலனை தற்போது அறுவடை செய்திருக்கிறது ‘ஐ’ டீம். ஆம்... ஷங்கரின் பிரம்மாண்ட இயக்கம், விக்ரமின் கடின உழைப்பு, பிசி ஸ்ரீராமின் கண்கவர் ஒளிப்பதிவு, ரஹ்மானின் மயக்கும் இசையில் உருவான ‘ஐ’ திரைப்படம் 100 நாட்களை எட்டி, ‘அதுக்கும் மேல’ போய்க் கொண்டிருக்கிறது. உலகளவில் இப்படம் 150 கோடிகளுக்கு மேல் வசூல் செய்திருக்கிறதாம்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தீரன் அதிகாரம் ஒன்று - Trailer


;