‘வா’ மூலம் டீலுக்கு வருகிறார் விக்டர்!

‘வா’ மூலம் டீலுக்கு வருகிறார் விக்டர்!

செய்திகள் 23-Apr-2015 10:47 AM IST VRC கருத்துக்கள்

‘மலை மலை’, ‘மாஞ்சா வேலு’, ‘தடையற தாக்க’ ஆகிய பங்களை தயாரித்த ‘ஃபெதர் டச் என்டர்டெயின்மென்ட்’ நிறுவனத்தின் நான்காவது தயாரிப்பு ‘வா’. முதல் மூன்று படங்களில் ஹீரோவாக நடித்த அருண் விஜய்யே இப்படத்திலும் ஹீரோவாக நடிக்க, அவருக்கு ஜோடியாக கார்த்திகா நாயர் நடித்துள்ளார். இவர்களுடன் சதீஷ் ரேணுகா, ஜெயப்பிரகாஷ், டான்ஸ் மாஸ்டர் கல்யாண், வம்சி கிருஷ்ணா, சுஜா வாருன்னி முதலானோரும் நடித்துள்ள இப்படத்தினை அறிமுக இயக்குனர் ரத்தின சிவா இயக்கியுள்ளார். இவர் ‘ரேனிகுண்டா’ படத்தை இயக்கிய பன்னீர்செலவத்திடம் உதவி இயக்குனராக பணிபுரிந்தவர்.

எதற்கும் ‘டீல்’ வைத்துக் கொள்ளும் ஒரு இளைஞனை பற்றிய கதையாம் ‘வா’. அதனை அதிரடி, ஆக்‌ஷன், காதல், காமெடி என ஜனரஞ்சக படமாக இயக்கியுள்ளாராம் ரத்தின சிவா. ‘என்னை அறிந்தால்’ படத்தில் அஜித்துடன் விக்டர் என்னும் வில்லன் கேரக்டரில் நடித்து அசத்திய அருண் விஜய்க்கு அந்த கேரக்டர் பெரும் புகழை தேடித் தந்த்து. ‘என்னை அறிந்தால்’ படத்தை தொடர்ந்து அருண் விஜய் நடிப்பில் வெளிவரவிருக்கும் படம் ‘வா’ என்பதால் இப்படத்தின் மீது பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

‘வா’ படத்தின் ஒளிப்பதிவு பொறுப்பை கோபி ஜெகதீஸ்வரன் ஏற்றிருக்க, எஸ்.எஸ்.தமன் இசை அமைத்துள்ளார். நேற்று நடந்த இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் இயக்குனர்கள் லிங்குசாமி, கௌதம் மேன்ன், பன்னீர் செல்வம், எஸ்.பி.ஜனநாதன், ஏ.வெங்கடேஷ், மற்றும் இப்படத்திற்கு பாடல்கள் எழுதியுள்ள விவேகா, கருணாகரன், நடனம் அமைத்துள்ள நோபல், கலை இயக்குனராக பணியாற்றியுள்ள மோகன மகேந்திரன், எடிட்டர் பிரவீன் உட்பட பல திரையுலக பிரபலங்கள் கலந்துகொண்டு அருண் விஜய்யையும் ‘வா’ படக்குழுவினரையும் வாழ்த்திப் பேசினார்கள். ‘வா’ விரைவில் ரிலீசாகவிருக்கிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ஸ்கெட்ச் - டீசர்


;