இயக்குனர் ஷங்கரை கவர்ந்த லேட்டஸ்ட் படம்!

இயக்குனர் ஷங்கரை கவர்ந்த லேட்டஸ்ட் படம்!

செய்திகள் 23-Apr-2015 10:41 AM IST Chandru கருத்துக்கள்

நீண்டநாட்களாக ஃபேஸ்புக், ட்விட்டர் போன்ற சமூக வலைதளங்களில் ரிலீஸாகும் படங்களைப் பற்றி கருத்து ஏதும் வெளியிடாமல் இருந்து வந்த இயக்குனர் ஷங்கர் நேற்று ஃபேஸ்புக்கில் லேட்டஸ்ட் ரிலீஸ் பற்றிய ஸ்டேட்டஸ் ஒன்றை அப்டேட் செய்திருக்கிறார். தான் பார்த்து, ரசித்து, மகிழ்ந்த படம் குறித்துதான் அந்த ஸ்டேட்டஸில் புகழ்ந்து தள்ளியிருக்கிறார். அது எந்தப் படம் தெரியுமா?

கடந்த 17ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகி வசூலில் பட்டையைக் கிளப்பிக் கொண்டிருக்கும் ‘காஞ்சனா’ படம்தான். ராகவா லாரன்ஸ் இயக்கி, வித்தியாசமான பல வேடங்களில் நடித்துள்ள இப்படத்தை சமீபத்தில் இயக்குனர் ஷங்கர் பார்த்துள்ளார். இதுகுறித்து, ‘‘முனி படம் பார்த்தேன். கோவை சரளாவின் காமெடி ஃபெர்மான்ஸை மிகவும் ரசித்துப் பார்த்தேன். பல திறமைகளைக் கொண்ட ராகவா லாரன்ஸின் நடிப்பு அபாரம். குறிப்பாக பாடல் ஒன்றில் வரும் சின்னப் பெண் கெட்அப்பில் அசத்தியிருக்கிறார்!’’ என ஸ்டேட்டஸ் அப்டேட் செய்துள்ளார் ஷங்கர்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

அவள் - காரிகள் கண்ணே பாடல் வீடியோ


;