படத்திற்காக மொட்டை அடித்த ஹீரோயின்!

படத்திற்காக மொட்டை அடித்த ஹீரோயின்!

செய்திகள் 23-Apr-2015 10:15 AM IST VRC கருத்துக்கள்

‘தமிழ் திரை விருட்சம்’ என்ற நிறுவனம் சார்பில் தமிழ்மணி கதாநாயகனாக நடித்து, தயாரித்துள்ள படம் ‘கிடாபூசாரி மகுடி’. இயக்குனர் வேலுபிரபாகரனிடம் உதவியாளராக இருந்த ஜெயகுமார் இயக்கியுள்ள இப்படத்தில் தமிழ் மணிக்கு ஜோடியாக கேரளாவை சேர்ந்த புதுமுகம் நக்‌ஷத்திரா நடித்துள்ளார். கோவிலில் கிடா வெட்டும் ‘மகுடி’ என்ற பாத்திரத்தில் நடித்துள்ளார் தமிழ்மணி. இவருக்கு காதலியாக வரும் நக்‌ஷத்திரா படத்தின் கதைப்படி தலை மொட்டை அடிக்க வேண்டுமாம்! இதனை தயங்கியவாறு படத்தின் இயக்குனர் ஜெயக்குமார் நக்‌ஷத்திராவிடம் சொல்லியிருக்கிறார். ஆனால் அதை கேட்டதும் நக்‌ஷத்திரா, ‘‘கதைக்காக தானே? நான் ரெடி!’’ என்று கூறியபடி தலையை மொட்டை அடிக்க சம்மதித்து அப்படியே படத்தில் நடிக்கவும் செய்துள்ளார். படத்திற்காக தனது தலைமுடியை தியாகம் செய்த நக்‌ஷத்திராவின் துணிச்சலை அனைவரும் பாராட்டினார்களாம்! இளையராஜா இசை அமைத்துள்ள இப்படத்தின் பாடல் வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. இப்படம் விரைவில் ரிலீசாகவிருக்கிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ஹர ஹர மஹாதேவகி - டிரைலர்


;