காவல் நிலையத்தில் நடக்கும் காதல் கதை!

காவல் நிலையத்தில் நடக்கும் காதல் கதை!

செய்திகள் 23-Apr-2015 10:03 AM IST VRC கருத்துக்கள்

‘‘மனித வாழ்க்கையில் தொலைந்து போன ஒரு விஷயத்தை தேடி நாம் போகிற இடமாக காவல் நிலையம் இருக்கிறது. அப்படி இருக்கும் காவல் நிலையத்தை பெரும்பாலானோரும் ஒருவித வெறுப்புடனும், அருவருப்புடனும் தான் பார்க்கிறார்கள். அந்த இடத்திற்கு சென்றுவிட்டால் அனைவரும் சிரிப்பை மறந்து விடுகிறார்கள்! ஆனால் ஊரில் இருந்து ஓடிவந்த ஒரு காதல் ஜோடியை காவல் நிலையத்திற்கு அழைத்து செல்லப்படுகிறார்கள். அந்த காவல் நிலையத்தில் இரவு 1 மணி முதல் மறுநாள் இரவு 1 மணி வரை அவர்கள் சந்திக்கும் காமெடியான் நிகழ்வுகளை வைத்து எடுக்கப்பட்டுள்ள படம் ‘விந்தை’. இந்த படம் வெளிவந்ததும் இது போன்ற ஒரு காவல் நிலையம் நம்ம ஊரிலும் இருந்தால் நன்றாக இருக்கும் என்று எல்லோரும் யோசிப்பார்கள். அப்படி ஒரு காமெடி படமாக ‘விந்தை’ அமைந்துள்ளது’’ என்கிறார் இப்படத்தை இயக்கியிருக்கும் லாரா! ஏற்கெனவே ‘வர்மம்’ என்ற படத்தை இயக்கியுள்ள லாராவின் இரண்டாவது படம் ‘விந்தை’.

‘அன்னை புதுமை மாதா ஃபிலிம்ஸ்’ நிறுவனம் சார்பில் R.L. யேசுதாஸ், R.Y ஆல்வின் இணைந்து தயாரித்துள்ள இப்படத்தில் மகேந்திரன் நாயகனாக நடிக்க, மனிஷாஜித் நாயகியாக நடித்துள்ளார். இவர்களுடன் மனோபாலா எம்.எஸ்.பாஸ்கர், ‘மகாநதி’ சங்கர், ‘காதல்’ சரவணன், முத்துக்காளை முதலானோரும் நடித்துள்ளனர். வில்லியம்ஸ் இசை அமைத்துள்ளார். ரத்தீஷ் கண்ணா ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. இவ்விழாவில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தை சேர்ந்த நிர்வாகிகள் உட்பட திரையுலகத்தை சேர்ந்த பலர் கலந்துகொண்டு ‘விந்தை’ படக்குழுவினரை வாழ்த்தினார்கள்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

விந்தை - டீசர்


;