கௌதம் மேனனின் அடுத்த பட ஹீரோ?

கௌதம் மேனனின் அடுத்த பட ஹீரோ?

செய்திகள் 23-Apr-2015 9:54 AM IST VRC கருத்துக்கள்

‘என்னை அறிந்தால்’ படத்தில் அருண் விஜய்யை வில்லனாக நடிக்க வைத்த இயக்குனர் கௌதம் மேனன் அடுத்து அருண் விஜய்யை ஹீரோவாக நடிக்க வைத்து ஒரு படத்தை இயக்க இருக்கிறார். இதனை கௌதம் மேனனே அறிவித்தார். ஆர்.ரத்தினசிவா இயக்கத்தில் அருண் விஜய், கார்த்திகா நாயர் ஜோடியாக நடித்துள்ள படம் ‘வா’. இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா நேற்று மாலை சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் இயக்குனர் கௌதம் மேன்னும் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசும்போது, ‘‘அருண் விஜய்யை ஹீரோவாக நடிக்க வைத்து விரைவில் ஒரு படத்தை இயக்க இருக்கிறேன்’’ என்று அறிவித்தார். ‘என்னை அறிந்தால்’ படத்தை தொடர்ந்து கௌதம் மேனன் தற்போது சிம்பு, பல்லவி சுபாஷ் நடிக்கும் ‘அச்சம் என்பது மடைமையடா’ என்ற படத்தை இயக்கி வருகிறார். இப்படம் முடிந்த பிறகு அருண் விஜய் நடிக்கும் படத்தை கௌதம் மேனன் இயக்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தடம் - டைட்டில் வீடியோ


;