அப்போ அஜித்... இப்போ சிம்பு!

அப்போ அஜித்... இப்போ சிம்பு!

செய்திகள் 22-Apr-2015 11:53 AM IST Chandru கருத்துக்கள்

‘வாலு’ படத்தை எப்படியாவது மே 9ஆம் தேதி ரிலீஸ் செய்துவிட வேண்டுமே என்ற பரபரப்பில் நகம் கடித்துக் கொண்டிருக்கும் சிம்பு, தற்போது கௌதம் மேனன் இயக்கி வரும் ‘அச்சம் என்பது மடைமையடா’ படத்தின் இறுதிகட்ட வேலைகளில் பிஸியாக இருக்கிறார். இந்நிலையில் இப்படத்தில் லேட்டஸ்ட்டாக தெலுங்கு நடிகர் ராணா டகுபதியும் இணைந்திருக்கிறார் என்ற செய்தி வெளியாகியிருக்கிறது.

அஜித்துடன் ‘ஆரம்பம்’ படத்தில் கெஸ்ட் ரோலில் நடித்த ராணா டகுபதி, ‘பெங்களூர் டேஸ்’ ரீமேக்கிற்காக தமிழ், தெலுங்கு என ஒரே நேரத்தில் உருவாகும் படத்தில் நாயகனாக தற்போது நடித்துக் கொண்டிருக்கிறார். இது ஒருபுறமிருக்க சமீபத்தில் ராணாவை சந்தித்த கௌதம் மேனன் ‘அச்சம் என்பது மடைமையடா’ கதையைப் பற்றி அவரிடம் கூறி, அதில் நடிக்க விருப்பமா எனக் கேட்டிருக்கிறார். அந்த கேரக்டர் பிடித்துப்போனதால் ராணாவும் நடிக்க சம்மதம் தெரிவித்துவிட்டாராம். அவருக்கான படப்பிடிப்பு விரைவில் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அஜிதைத் தொடர்ந்து, சிம்புவுடனும் ராணா நடிப்பதால் ‘எஸ்டிஆர்’ ரசிகர்கள் உற்சாகத்தில் இருக்கின்றனர்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

இந்திரஜித் - ட்ரைலர்


;