பி.ஆர்.ஓ.யூனியன் புதிய அலுவலகம் திறப்பு விழா!

பி.ஆர்.ஓ.யூனியன் புதிய அலுவலகம் திறப்பு விழா!

செய்திகள் 21-Apr-2015 11:21 AM IST VRC கருத்துக்கள்

தென்னிந்திய திரைப்பட பத்திரிகை தொடர்பாளர் யூனியன் என திரையுலகில் அழைக்கப்படும் மக்கள் தொடர்பாளர்கள் யூனியனின் புதிய அலுவலக திறபு விழா சென்னை, வடபழனி முருகன் கோவில் அருகில் உள்ள அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. இவ்விழாவில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க துணை தலைவர்கள் பி.எல்.தேனப்பன், கதிரேசன், செயலாளர் ஆர்.ராதாகிருஷ்ணன், செயற்குழு உறுப்பினர்கள் எடிட்டர் மோகன், ஹெச்.முரளி, மனோஜ்குமார், முன்னாள் செயலாளர் சிவசக்தி பாண்டியன் மற்றும் இயக்குனர்கள் விக்ரமன், எஸ்.பி.முத்துராமன், வி.சேகர், ‘பெப்சி’ தலைவர் சிவா, சின்னத்திரை நடிகர்கள் சங்கத்தின் தலைவரும், நடிகையுமான நளினி உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இவ்விழாவிற்கு வந்திருந்தவர்களை பி.ஆர்.ஓ. சங்க தலைவர் விஜயமுரளி, செயலாளர் பெரு.துளசி பழனிவேல், பொருளாளர் மௌனம் ரவி, இணை செயலாளர்கள் கணேஷ் குமார், வெங்கட், துணை தலைவர்கள் கோவிந்தராஜ், சங்கரலிங்கம், முன்னாள் தலைவர்கள் நெல்லை சுந்தர்ராஜன், டைமண்ட் பாபு மற்றும் மற்ற மக்கள் தொடர்பாளர்கள் வரவேற்றனர்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

;