முதல் ஷெட்யூலை முடித்துக்கொண்டார் சமந்தா!

முதல் ஷெட்யூலை முடித்துக்கொண்டார் சமந்தா!

செய்திகள் 21-Apr-2015 10:39 AM IST VRC கருத்துக்கள்

சூர்யாவுடன் ‘அஞ்சான்’ படத்தில் இணைந்து நடித்த சமந்தா, மீண்டும் சூர்யாவுடன் ஜோடி சேர்ந்துள்ள படம் ‘24’. ‘யாவரும் நலம்’ படப் புகழ் விக்ரம் குமார் இயக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் மும்பையில் துவங்கியது. இந்த படப்பிடிப்பில் சூர்யாவுடன் சமந்தாவும் கலந்துக் கொண்டார்! முதல் ஷெட்யூலில் சமந்தா சம்பந்தப்பட்ட காட்சிகளின் படப்பிடிப்பு முடிந்து விட்டதாம்! இதனை தொடர்ந்து சமந்தா மும்பையிலிருந்து தாயகம் திரும்பியுள்ளார். சயன்டிஃபிக் த்ரில்லர் படமாக உருவாகி வரும் ‘24’ படத்தை சூர்யாவின் ‘2டி என்டர்டெயின்மென்ட்’ நிறுவனம் பிரம்மாண்டமான முறையில் தயாரிக்கிறது. இப்படத்தில் கிராஃபிக்ஸ் வேலைகளுக்கு அதிக முக்கியத்துவம் இருப்பதாகவும், அந்த வேலைகளை ஹாலிவுட்டில் செய்ய திட்டமிட்டுள்ளார்கள் என்றும் கூறப்படுகிறது. சூர்யா நடித்துள்ள ‘மாஸ்’ படம் மே-15 ஆம் தேதி ரிலீசாகவிருக்கிற நிலையில் ‘24’ படத்தின் படப்பிடிப்பு தொடர்ந்து நடந்து வருகிறது. இப்படத்திற்கு இசை அமைப்பவர் ஏ.ஆர்.ரஹ்மான் என்பது ஏற்கெனவே எல்லோருக்கும் தெரிந்த தகவல்தான்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

மகளிர் மட்டும் - டிரைலர்


;