விரைவில் ‘அரண்மனை-2’

விரைவில் ‘அரண்மனை-2’

செய்திகள் 21-Apr-2015 10:13 AM IST VRC கருத்துக்கள்

சுந்தர்.சி.இயக்கத்தில் சமீபத்தில் வெளியாகி சூப்பர் ஹிட்டான படம் ‘அரண்மனை’. சுந்தர்.சி., வினய், சந்தானம், ஹன்சிகா மோத்வானி, லட்சுமி ராய், ஆன்ட்ரியா முதலானோர் முக்கிய கேரக்டர்களில் நடித்த இப்படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க திட்டமிட்டுள்ளார் சுந்தர்.சி. என்று கூறப்படுகிறது. இப்போது அதற்கான ஸ்கிரிப்ட் வேலைகளில் பிசியாக இயங்கி வருகிறாராம் சுந்தர்.சி. ‘அரண்மனை’ படத்தில் ஹன்சிகா மோத்வானி ஏற்று நடித்திருந்த கேரக்டரை மையப்படுத்தி கதை அமைக்கப்பட்டிருந்தது. இரண்டாம் பாகத்தில் ஹன்சிகாவின் கேரக்டர் படம் முழுக்க வருவது மாதிரி அமைக்க திட்டமிட்டுள்ளாராம் சுந்தர்.சி. ‘டார்லிங்’, ‘காஞ்சனா-2’ முதலிய ஹாரர் படங்கள் இப்போது வெற்றிபெற்று வருவதால் ‘அரண்மனை’யின் இரண்டாம் பாகத்தை விரைவில் எடுத்து முடித்து ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளார் சுந்தர்.சி. என்று கூறப்படுகிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

துப்பறிவாளன் - மேக்கிங் வீடியோ


;