‘ஓ காதல் கண்மணி’யை புகழ்ந்து தள்ளிய சூர்யா!

‘ஓ காதல் கண்மணி’யை புகழ்ந்து தள்ளிய சூர்யா!

செய்திகள் 20-Apr-2015 5:15 PM IST VRC கருத்துக்கள்

மணிரத்னம் இயக்கத்தில் வெளிவந்துள்ள ‘ஓ காதல் கண்மணி’க்கு ரசிகர்களின் பெரும் ஆதரவு கிடைத்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்க, விமர்சன ரீதியாகவும் இப்படத்திற்கு பாராட்டுக்கள் குவிந்தவண்ணம் உள்ளன. அது மட்டுமல்லாமல் இப்படத்தை பார்த்த சில சினிமா பிரபலங்களும் ‘ஓ காதல் கண்மணி’ படக் குழுவினரை பாராட்டி வருகின்றனர். இப்படம் வெளியான அன்றே படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்திருப்பதை அறிந்த நடிகர் சூர்யா, கூடிய சீக்கிரம் ‘ஓ காதல் கண்மணி’ படத்தை பார்க்க வேண்டும் என்ற ஆவல் ஏற்பட்டுள்ளது என்று குறிப்பிட்டிருந்தார். இதனை தொடர்ந்து ‘ஓ காதல் கண்மணி’ படத்தை பார்த்துள்ளார் சூர்யா!

இது குறித்து அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் ‘Just watched #OKKanmani! Mani sir,P.C sir,ARR.. WOW!! Couldn't take my eyes off the actors! Superb @dulQuer, nithya menon....! #Happy’ என்று கருத்து தெரிவித்துள்ளார். நாளுக்கு நாள் இப்படி ‘ஓ காதல் கண்மணி’ படத்திற்கு கிடைத்து வரும் பாராட்டுக்களால் பெரும் மகிழ்ச்சிக்கு உள்ளாகியிருக்கிறார்கள் ‘ஓகே கண்மணி’ டீம்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சொடக்கு ஆடியோ பாடல்


;