‘ஜெயம்’ ரவியுடன் இணையும் லட்சுமி மேனன்!

‘ஜெயம்’ ரவியுடன் இணையும் லட்சுமி மேனன்!

செய்திகள் 20-Apr-2015 2:41 PM IST VRC கருத்துக்கள்

சிபிராஜை வைத்து ‘நாணயம்’ மற்றும் வெற்றிபெற்ற ’நாய்கள் ஜாக்கிரதை’ படங்களை இயக்கிய சக்தி ராஜன் அடுத்து ‘ஜெயம்’ ரவி நடிப்பில் ஒரு படத்தை இயக்குகிறார். இன்னும் பெயரிடப்படாத இப்படத்தில் ‘ஜெயம்’ ரவிக்கு ஜோடியாக லட்சுமி மேனன் நடிக்கிறார். ‘கொம்பன்’ படத்தில் கார்த்திக்கு ஜோடியாக நடித்த லட்சுமி மேனன், அடுத்து அஜித்தை வைத்து ‘வீரம்’ சிவா இயக்கும் பெயரிடப்படாத படத்தில் அஜித்துக்கு தங்கையாக நடிக்கவும் ஒப்பந்தமாகியிருக்கிறார் என்று கூறப்படுகிறது. நல்ல வசூல் செய்த ‘நாய்கள் ஜாக்கிரதை’ படத்தை தொடர்ந்து சக்தி ராஜன் இயக்கும் மூன்றாவது படமான இப்படத்தின் மற்ற நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞ்ரகளின் தேர்வு நடந்துவருவதாக கூறப்படுகிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

டிக் டிக் டிக் - டீசர்


;