அஷோக் செல்வன், ப்ரியா ஆனந்த் நடிக்கும் ‘கூட்டத்தில் ஒருவன்’

அஷோக் செல்வன், ப்ரியா ஆனந்த் நடிக்கும் ‘கூட்டத்தில் ஒருவன்’

செய்திகள் 20-Apr-2015 12:48 PM IST Chandru கருத்துக்கள்

‘சூது கவ்வும்’ படம் மூலம் பரவலாக பேசப்பட்ட நடிகர் அஷோக் செல்வன் ‘தி வில்லா’ படத்தின் மூலம் தனி ஹீரோவாக புரமோஷன் பெற்றார். அதனைத் தொடர்ந்து ரமேஷ் இயக்கத்தில் அவர் ஹீரோவாக நடித்து வெளிவந்த ‘தெகிடி’ படம் விமர்சனரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது. இதனால் இப்போது அஷோக் செல்வனைத் தேடி வாய்ப்புகள் வந்துகொண்டிருக்கின்றன.

சவாலே சமாளி, 144, வரைபடம் ஆகிய படங்களில் தற்போது நடித்துக் கொண்டிருக்கும் அஷோக் செல்வன் ‘கூட்டத்தில் ஒருவன்’ எனும் படத்திலும் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார். முழுக்க முழுக்க ரொமான்ஸுக்கு முக்கியத்துவம் உள்ள இப்படத்தை ஞானவேல் எனும் அறிமுக இயக்குனர் இயக்குகிறார். இவர் ஏற்கெனவே பிரகாஷ் ராஜின் ‘தோனி’ படத்தில் வசனகர்த்தாவாக பணியாற்றியிருக்கிறார். அஷோக் செல்வனுக்கு ஜோடியாக ப்ரியா ஆனந்த் நடிக்கும் இப்படத்திற்கு ‘தெகிடி’ நிவாஸ் பிரசன்னா இசையையும், ‘அட்டகத்தி’ பிரமோத் ஒளிப்பதிவையும் கவனிக்கிறார்கள். விரைவில் இப்படத்திற்கான படப்பிடிப்பு துவங்கவிருக்கிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

கூட்டத்தில் ஒருத்தன் - நீ இன்றி பாடல் வீடியோ


;