ஷூட்டிங் முடிந்து ரிலீஸுக்கு பரபரக்கும் ‘மாஸ்’

ஷூட்டிங் முடிந்து ரிலீஸுக்கு பரபரக்கும் ‘மாஸ்’

செய்திகள் 20-Apr-2015 11:30 AM IST Chandru கருத்துக்கள்

வெங்கட்பிரபுவின் இயக்கத்தில் சூர்யா வித்தியாசமான வேடமேற்று நடித்து வரும் ‘மாஸ்’ படத்தின் படப்பிடிப்பு வேலைகள் நேற்றோடு (ஏப்ரல் 19) நிறைவுபெற்றது. இதனை வெங்கட்பிரபுவே தனது ட்வீட் மூலம் உறுதிப்படுத்தியிருக்கிறார். தற்போது படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. இப்படத்தில் கிராபிக்ஸுக்கு அதிக முக்கியத்துவம் இருப்பதால் கடந்த பல வாரங்களாக அதன் வேலைகள் பிஸியாக நடைபெற்று வருகிறதாம். டப்பிங்கைப் பொறுத்தவரை சூர்யா தன்னுடையே வேலைகளை சில நாட்களுக்கு முன்பே முழுமையாக முடித்துவிட்டார்.

மே 15ஆம் தேதி ‘மாஸ்’ படத்தை ரிலீஸ் செய்ய ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் திட்டமிட்டிருப்பதால், தற்போது ஃபர்ஸ்ட் லுக் டீஸர், டிரைலர், ஆடியோ வெளியீடு ஆகியவற்றிற்கான வேலைகளை முடுக்கிவிட்டுள்ளதாம். இன்னும் ஓரிரு நாட்களில் இதுகுறித்து அதிகாரபூர்வ அறிவிப்பு வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சூர்யாவுடன் நயன்தாரா, ப்ரணிதா, பிரேம்ஜி அமரன், இயக்குனர் சமுத்திரக்கனி ஆகியோர் நடித்திருக்கும் ‘மாஸ்’ படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தானா சேர்ந்த கூட்டம் - சொடக்கு பாடல் டீசர்


;