விஜய்யைத் தொடர்ந்து தனுஷ் படத்திலும் ராதிகா சரத்குமார்!

விஜய்யைத் தொடர்ந்து தனுஷ் படத்திலும் ராதிகா சரத்குமார்!

செய்திகள் 20-Apr-2015 11:00 AM IST Chandru கருத்துக்கள்

தொலைக்காட்சியின் சூப்பர்ஹிட் தொடரான ‘வாணி ராணி’யில் இரட்டை வேடத்தில் பிஸியாக நடித்துக் கொண்டிருப்பதால் சமீபகாலமாக படங்களில் ரொம்பவும் குறைவாகவே நடித்து வந்தார் ராதிகா சரத்குமார். 2012ல் சகுனி, 2013ல் சென்னையில் ஒரு நாள், 2014ல் பூஜை என வருடத்திற்கு ஒரு படத்தில் மட்டுமே நடித்துவந்த ராதிகா தற்போது மீண்டும் முழுவீச்சில் படங்களில் நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார்.

அட்லி இயக்கத்தில் விஜய் நடிக்கும் அவரின் 59வது படத்தில் முக்கிய வேடமொன்றில் நடிக்க கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒப்பந்தம் செய்யப்பட்டார் ராதிகா. தற்போது விஜய்யைத் தொடர்ந்து தனுஷ் படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறாராம். வேல்ராஜ் இயக்கத்தில் மீண்டும் தனுஷ் நடித்து வரும் படத்தில் அவருக்கு அம்மாவாக நடிக்கிறாராம் ராதிகா. கடந்த சில நாட்களாக படப்பிடிப்பு நடைபெற்று வரும் இப்படத்தில் தனுஷின் அம்மாவாக ராதிகா நடிக்கும் தகவல் இப்போதுதான் வெளிவந்திருக்கிறது.

இந்த 2 படங்கள் தவிர தனுஷ் தயாரிப்பில் விஜய்சேதுபதி, நயன்தாரா நடிக்கும் ‘நானும் ரௌடிதான்’ படத்திலும் நடித்துக் கொண்டிருக்கிறாராம் ராதிகா சரத்குமார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

கரு - டிரைலர்


;