ஸ்ருதிஹாசன் மீது தொடரப்பட்ட வழக்கு வாபஸ்!

ஸ்ருதிஹாசன் மீது தொடரப்பட்ட வழக்கு வாபஸ்!

செய்திகள் 20-Apr-2015 10:47 AM IST VRC கருத்துக்கள்

கார்த்தி, நாகார்ஜுனா இணைந்து நடிக்க, ‘பிக்சர் ஹவுஸ் மீடியா’ நிறுவனம் ஒரு படத்தை தயாரித்து வருகிறது. இப்படத்தின் பூஜை சமீபத்தில் சென்னையில் நடந்தது. தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் உருவாகும் இப்படத்தில் கார்த்திக்கு ஜோடியாக நடிக்க ஸ்ருதி ஹாசன் ஒப்பந்தமாகியிருந்தார். ஆனால் சில தவிர்க்க முடியாத காரணங்களால் ஸ்ருதி ஹாசன் இப்படத்திலிருந்து விலகினார். இதனை தொடர்ந்து ‘பிக்சர் ஹவுஸ் மீடியா’ நிறுவனம் ஸ்ருதி ஹாசன் மீது வழக்கு தொடர்ந்தது. இதனை தொடர்ந்து தான் இப்படத்திலிருந்து விலகியதற்கான காரணம் என்ன என்பதற்கு விளக்கம் அளித்திருந்தார் ஸ்ருதி ஹாசன்! இந்நிலையில் இந்த பிரச்சினையை சுமுகமாக பேசி தீர்க்க, தென்திந்திய நடிகர் சங்க தலைவர் சரத்குமார், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தலைவர் ‘கலைப்புலி’ எஸ்.தாணு, மற்றும் தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகளான பி.எல்.தேனப்பன், டி.சிவா முதலானோர் ‘பிக்சர் ஹவுஸ் மீடியா’ நிர்வாகத்தினரிடம் பேசினர். இதனை தொடர்ந்து ஸ்ருதி ஹாசன் மீது தொடரப்பட்டிருந்த வழக்கை ‘பிக்சர் ஹவுஸ் மீடியா’ நிறுவனம் வாபஸ் பெற்றுள்ளது. இதனை தொடர்ந்து ஸ்ருதி ஹாசன் அந்த பிரச்சனையிலிருந்து விடுபட்டுள்ளார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

மேயாத மான் - தங்கச்சி பாடல் வீடியோ


;