‘காஞ்சனா 2’ மூன்று நாள் வசூல்?

‘காஞ்சனா 2’ மூன்று நாள் வசூல்?

செய்திகள் 20-Apr-2015 10:35 AM IST Chandru கருத்துக்கள்

ராகவா லாரன்ஸ் இயக்கி நடித்து பெரும் எதிர்பார்ப்புடன் வெளிவந்திருக்கும் ‘காஞ்சனா’ 2ஆம் பாகத்திற்கு பட்டி தொட்டியெங்கும் பலத்த வரவேற்பு கிடைத்திருப்பதாகக் கூறுகிறார்கள். லாரன்ஸ், டாப்ஸி, நித்யாமேனன், கோவை சரளா, ஸ்ரீமன், மனோபாலா உட்பட ஏகப்பட்ட நட்சத்திரங்கள் நடித்திருக்கும் ‘முனி’ படத்தின் 3ஆம் பாகமான ‘காஞ்சனா 2’ கடந்த வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 17) உலகமெங்கும் வெளியானது. தமிழகம் மட்டுமின்றி இப்படம் கேரளா, ஆந்திராவிலும் அதே நாளில் ரிலீஸ் செய்யப்பட்டது.

‘காஞ்சனா’ முதல் பாகம் தந்த வெற்றியில் இப்படத்திற்கு ஆரம்பத்திலிருந்தே பெரிய எதிர்பார்ப்பு நிலவி வந்தது. அதோடு சன் பிக்சர்ஸ் வாங்கி வெளியிட்டதால், தடபுடலான புரமோஷன்களும் செய்யப்பட்டன. இதனால் இப்படம் தமிழகத்தில் வெளியான 330க்கும் அதிகமான திரையரங்குகளில் முதல் 3 நாட்களுமே 90 சதவிகிதத்திற்கும் மேற்பட்ட ரசிகர்கள் குவிந்ததாகக் கூறப்படுகிறது. பல திரையரங்குகளில் ஹவுஸ்ஃபுல் போர்டும் மாட்டப்பட்டது. இதனால் இப்படம் எதிர்பார்த்ததைப் போல நல்ல வசூல் செய்திருக்கிறது. விமர்சனங்களைப் பொறுத்தவரை கொஞ்சம் முன்னுக்குப் பின்னாக இருந்தபோதிலும் வசூலில் 3 நாட்களில் கிட்டத்தட்ட 12 கோடி ரூபாய் வசூலித்திருக்கிறதாம். முன்னணி நடிகர்களின் படங்களுக்குப் பிறகு பெரிய வசூல் செய்த படமாக ‘காஞ்சனா 2’வைக் கூறுகிறார்கள். தமிழகம் மட்டுமின்றி கேரளா, ஆந்திரா, மலேசியா உள்ளிட்ட இடங்களிலும் ‘காஞ்சனா 2’விற்கு நல்ல வசூல் கிடைத்திருக்கிறதாம்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

மெர்சல் - பாடல் வீடியோ


;