‘மெகா’ ரிலீஸ் பிளானில் உலகநாயகனின் ‘உத்தம வில்லன்’

‘மெகா’ ரிலீஸ் பிளானில் உலகநாயகனின் ‘உத்தம வில்லன்’

செய்திகள் 18-Apr-2015 10:51 AM IST Chandru கருத்துக்கள்

ரிலீஸ் தடைகள் என்பது உலகநாயகன் படங்களுக்கு புதிதல்ல. ஆனால், எல்லாவற்றையும் ஊதித்தள்ளிவிட்டு திட்டமிட்டபடி தியேட்டரில் அடியெடுத்து வைத்துவிடுவார். திருப்பதி பிரதர்ஸ் தயாரிப்பில் உருவாகியிருக்கும் ‘உத்தமவில்லன்’ படத்திற்கும் சிலர் எதிர்ப்பு தெரிவித்த வண்ணமுள்ளனர். ஆனால், ‘கொம்பன்’ படத்திற்கு திரையுலகம் ஒன்றுகூடியதுபோல் ‘உத்தமவில்லனு’க்கும் கைகோர்க்க இப்போது அப்படம் ரிலீஸாவதில் எந்த சிக்கலும் இல்லை என்ற நிலை உருவாகியிருக்கிறது.

இதனால் ஏற்கெனவே திட்டமிட்டபடி படம் வரும் மே 1ஆம் தேதி ரிலீஸாவது உறுதியாகியுள்ளது. சென்சாரில் யு சான்றிதழ் வாங்கியிருக்கும் ‘உத்தம வில்லன்’ படத்திற்கு தமிழகத்தின் முக்கிய திரையரங்குகள் பலவற்றையும் ‘புக்’ செய்துவிட்டார்கள். குறிப்பாக சென்னையிலுள்ள முக்கிய திரையரங்குகளான சத்யம் சினிமாஸ், ஐநாக்ஸ், அபிராமி, தேவி, கமலா, ஏவிஎம் ராஜேஸ்வரி, உதயம் காம்ப்ளக்ஸ் உட்பட பலவற்றிலும் ரிலீஸாகிறது உத்தம வில்லன். தமிழகத்தில் மட்டும் 400க்கும் அதிகமான திரையரங்குகளில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படும் இப்படம் உலகமெங்கும் 1500க்கும் அதிகமான திரையரங்குகளில் வெளியாகும் எனத் தெரிகிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

அவள் - டிரைலர்


;