‘ரஜினி முருகனி’ன் ஃபேர்வெல் பார்ட்டி...!

‘ரஜினி முருகனி’ன் ஃபேர்வெல் பார்ட்டி...!

செய்திகள் 18-Apr-2015 10:37 AM IST Chandru கருத்துக்கள்

'காக்கி சட்டை’ படத்தைத் தொடர்ந்து ‘விவிஎஸ்’ பொன்ராம் இயக்கத்தில் ‘ரஜினி முருகன்’ படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார் சிவகார்த்திகேயன். மெயின் காமெடியனாக சூரி நடிக்கும் இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். இவர்களுடன் இயக்குனர் சமுத்திரக்கனி, ராஜ்கிரண் ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள்.

திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் ‘ரஜினி முருகன்’ படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. கடந்த சில மாதங்களாக சிறப்பாக நடைபெற்று வந்த இப்படத்தின் படப்பிடிப்பு நேற்றோடு நிறைவுபெற்றுள்ளது. இதனையடுத்து ஏற்கெனவே திட்டமிட்டபடி ‘ரஜினி முருகனி’ன் ஃபர்ஸ்ட் லுக்கை ஏப்ரல் 25ஆம் தேதி நடைபெறும் விஜய் அவார்ட்ஸ் விழாவில் வெளியிடுகிறார்கள். அதோடு டி.இமான் இசையமைப்பில் உருவாகியிருக்கும் பாடல்களை ஜூன் 7ஆம் தேதி வெளியிடத் திட்டமிட்டிருக்கிறார்கள். படம் ஜூலை 17ஆம் தேதி உலகமெங்கும் ரிலீஸாகிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

வேலைக்காரன் - எழு வேலைக்காரா பாடல் வீடியோ


;