மீண்டும் ஆண்பாவம் : மகனை இயக்குகிறார் பாண்டியராஜன்!

மீண்டும் ஆண்பாவம் : மகனை இயக்குகிறார் பாண்டியராஜன்!

செய்திகள் 18-Apr-2015 10:23 AM IST Chandru கருத்துக்கள்

ஆர்.பாண்டியராஜனின் கதை, திரைக்கதை, வசனம், இயக்கத்தில் பல வருடங்களுக்கு முன்பு வெளிவந்து வெற்றிபெற்ற ‘ஆண்பாவம்’ படம் மீண்டும் தயாராகிறது. இன்றைய காலத்திற்கு ஏற்ப கதை, திரைக்கதையில் சிற்சில மாற்றங்களைச் செய்து மீண்டும் பாண்டியராஜனே இயக்கும் இப்படத்தில் அவரது மகன் பிருத்விராஜனையே ஹீரோவாக்கி இருக்கிறார்கள்.

‘வஜ்ரம்’ படத்தைத் தயாரித்த ஸ்ரீசாய்ராம் ஃபிலிம் ஃபேக்டரி சார்பில் இப்படத்தை ஆர்.சங்கர் தயாரிக்கிறார். பழைய ‘ஆண்பாவம்’ படத்தில் பாண்டியராஜன், பாண்டியன் என 2 ஹீரோக்களும், சீதா, ரேவதி என 2 ஹீரோயின்களும் நடித்திருந்தார்கள். இந்த புதிய ஆண்பாவத்தில் பிருத்விராஜன் மட்டுமே இப்போதைக்கு ஹீரோவாக அறிவிக்கப்பட்டுள்ளார். இன்னொரு ஹீரோ, 2 ஹீரோயின்கள், உடன் நடிக்கும் நட்சத்திரங்கள், டெக்னீஷியன்கள் உள்ளிட்ட விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படுமாம். கேரளாவிலுள்ள ஒற்றப்பாலத்தில் இப்படத்திற்கான படப்பிடிப்பு விரைவில் துவங்க உள்ளது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

மன்னர் வகையறா - தட்டான போல ப்ரோமோ


;