6 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் சூர்யா - எஸ்.பி.ஜனநாதன்!

6 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் சூர்யா - எஸ்.பி.ஜனநாதன்!

செய்திகள் 16-Apr-2015 5:48 PM IST Chandru கருத்துக்கள்

வெங்கடப்பிரபு இயக்கத்தில் சூர்யா நடித்திருக்கும் ‘மாஸ்’ படமும், எஸ்.பி.ஜனநாதன் இயக்கத்தில் விஜய்சேதுபதி, ஆர்யா, ஷாம் ஆகியோர் நடித்திருக்கும் ‘புறம்போக்கு என்கிற பொதுவுடைமை’ படமும் வரும் மே 15ஆம் தேதி உலகமெங்கும் ஒரே நேரத்தில் ரிலீஸாகவிருக்கிறது. ஆரம்பத்தில் இந்த இரண்டு படங்களுமே மே 1ஆம் தேதி தங்களின் ரிலீஸ் தேதியை அறிவித்திருந்தன. ஆனால், படவேலைகள், அதே நாளில் ‘உத்தமவில்லன்’ ரிலீஸாவது உள்ளிட்ட சில காரணங்களால் இப்போது இரண்டு படங்களுமே தங்களின் ரிலீஸ் தேதியை மே 15ஆம் தேதிக்கு தள்ளி வைத்துள்ளன.

ஒரே நேரத்தில் சூர்யாவின் படமும், இயக்குனர் எஸ்.பி.ஜனநாதன் படமும் கிட்டத்தட்ட 6 வருடங்களுக்கு முன்பும் ரிலீஸாகி உள்ளன. 2009ஆம் ஆண்டு அக்டோபர் 17ஆம் தேதி சூர்யாவின் ‘ஆதவன்’ திரைப்படமும், எஸ்.பி.ஜனநாதன் இயக்கத்தில் ஜெயம் ரவி நடித்த ‘பேராண்மை’ படம் அக்டோபர் 16ஆம் தேதியும் வெளியாகி ஒரே நேரத்தில் போட்டியிட்டது குறிப்பிடத்தக்கது. தற்போது கிட்டத்தட்ட 6 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் சூர்யா, எஸ்.பி.ஜனநாதன் படங்கள் நேரடியாக மோதிக் கொள்கின்றன.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தானா சேர்ந்த கூட்டம் - சொடக்கு பாடல் டீசர்


;