ரிலீஸ் தேதியை உறுதிசெய்த சூர்யாவின் ‘மாஸ்’

ரிலீஸ் தேதியை உறுதிசெய்த சூர்யாவின் ‘மாஸ்’

செய்திகள் 16-Apr-2015 5:25 PM IST Chandru கருத்துக்கள்

வெங்கட் பிரபு இயக்கத்தில் சூர்யா வித்தியாசமான வேடமேற்று நடிக்கும் ‘மாஸ்’ படத்தின் இறுதிக்கட்ட வேலைகள் தற்போது பரபரப்பாக நடந்து கொண்டிருக்கின்றன. நயன்தாரா, ப்ரணிதா என இரண்டு ஹீரோயின்கள் நடிக்கும் இப்படத்தில் சமுத்திரக்கனி, பிரேம்ஜி அமரன் ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கும் இப்படத்தை முதலில் மே 1ஆம் தேதி வெளியிடத் திட்டமிட்டிருந்தார்கள். ஆனால், பட வேலைகள் அதற்குள் முடிவடையாது என்பதால் தற்போது ரிலீஸ் தேதியை மே 15ஆம் தேதிக்கு தள்ளி வைத்திருக்கிறார்கள்.

பின்னணி குரல் கொடுக்கும் பணிகள் முடிவடைந்து தற்போது பர்ஸ்ட்லுக், டீஸர் உருவாக்கும் பணியில் பிஸியாக இருக்கிறார் வெங்கட்பிரபு. ‘மாஸ்’ வெளியாகும் அதே நாளில் யுடிவியின் ‘புறம்போக்கு என்கிற பொதுவுடைமை’யும் ரிலீஸாகவிருப்பது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தானா சேர்ந்த கூட்டம் - சொடக்கு பாடல் டீசர்


;