உத்தம வில்லனுக்கு வழி விட்ட புறம்போக்கு!

உத்தம வில்லனுக்கு வழி விட்ட புறம்போக்கு!

செய்திகள் 16-Apr-2015 4:58 PM IST VRC கருத்துக்கள்

எஸ்.பி.ஜனநாதன் இயக்கத்தில் ஆர்யா, விஜய் சேதுபதி, ஷாம், கார்த்திகா நாயர் முதலானோர் நடித்திருக்கும் படம் ‘புறம்போக்கு’. எஸ்.பி.ஜனநாதனின் ‘பைனரி பிக்சர்ஸ்’ நிறுவனமும், ‘யுடிவி’ நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ள இப்படம் தொழிலாளர் தினமான மே1-ஆம் தேதி ரிலீசாவதாக இருந்தந்து. இதனை அதிகாரபூர்வமாக அறிவிக்கவும் செய்திருந்தார்கள்! இதே தினம் தான் கமல்ஹாசனின் ‘உத்தம வில்லன்’ படமும் ரீலிசாகிறது. இந்த படம் தவிர கௌதம் கார்த்திக் நடித்து, ஐஸ்வர்யா தனுஷ் இயக்கியுள்ள ‘வை ராஜா வை’ படமும் மே-1-ல் ரிலீஸ் என்று அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கிறார்கள். ‘உத்தம வில்லன்’ படம் ரசிகர்களின் பெரிய எதிர்பார்ப்பில் இருந்து வருவதால் இப்படம் அதிக எண்ணிக்கையிலான தியேட்டர்களில் வெளியாக இருக்கிறது. இதனால் எந்த படத்திற்கும் நாங்கள் போட்டியாக இருக்க விரும்பவில்லை என்ற அறிவிப்போடு ‘ ‘புறம்போக்கு’ படத்தின் ரிலீஸ் தேதியை மே 15-க்கு தள்ளி வைத்திருக்கிறார்கள் அப்படக் குழிவினர்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

'தல' பிடிக்கும் ஆனாலும் நான் 'தளபதி' ரசிகன் தான் - ஹரிஷ் கல்யாண்


;