அஸ்வின் ஸ்வாதி ரெட்டி நடிக்கும் திரி!

அஸ்வின் ஸ்வாதி ரெட்டி நடிக்கும் திரி!

செய்திகள் 16-Apr-2015 4:36 PM IST VRC கருத்துக்கள்

‘சீஷோர் கோல்ட் புரொடக்ஷன்ஸ்’ சார்பில் ஏ.கே. பாலமுருகன், ஆர். பாலகோபி இணைந்து தயாரிக்கும் படம் ‘திரி’. இப்படத்தை புதுமுக இயக்குனர் அசோக் அமிர்தராஜ் இயக்குகிறார். இப்படத்தில் அஷ்வின் கக்கமனு, ஸ்வாதி ரெட்டி, ஜெயபிரகாஷ், கருணாகரன், ஏ.எல். அழகப்பன் ஆகியோர் நடிக்கிறார்கள்.

‘‘திரி’ என்பதை தூண்டிவிட வேண்டும். அந்த தூண்டல் தீபம் எரிவதற்காகவும் இருக்கலாம், இல்லை தீப்பந்தமாகவும் மாறலாம். ஆனால் தூண்டல் ஒன்றுதான். ‘தாயை போல பிள்ளை’ என்ற பழமொழி என்னை பாதித்தன் விளைவுதான் இந்தக் கதை. ஒரு பிள்ளையின் வாழ்க்கையில் பெற்றோர்கள் எவ்வளவு முக்கியமானவர்கள் என்ற அடிப்படையில் மனித உணர்வுகளை மையமாக வைத்து இப்படத்தை படமாக்கியுள்ளேன்” என்கிறார் இப்படத்தின் இயக்குனர் அசோக் அமிர்தராஜ்.

இப்படத்தின் ஒளிப்பதிவு பொறுப்பை ‘சதுரங்க வேட்டை’ புகழ் கே.ஜி. வெங்கடேஷ் ஏற்றிருக்க, ராஜா சேதுபதி படத்தொகுப்பு செய்ய, கவிப்பேரரசு வைரமுத்துவின் பாடல் வரிகளுக்கு எஸ்.எஸ்.தமன் இசை அமைத்துள்ளார். இப்படம் விரைவில் திரைக்கு வரவிருக்கிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

இது வேதாளம் சொல்லும் கதை - டீசர்


;