தமிழ் சினிமாவுக்கு இன்னொரு ஹாரிஸ்!

தமிழ் சினிமாவுக்கு இன்னொரு ஹாரிஸ்!

செய்திகள் 16-Apr-2015 3:08 PM IST VRC கருத்துக்கள்

‘கண்ணெதிரே தோன்றினாள்’, ‘மஜ்னு’, ‘சந்தித்த வேளை’, ‘உற்சாகம்’ ஆகிய படங்களை தொடர்ந்து ரவிச்சந்திரன் இயக்கியுள்ள ஐந்தாவது படம் ‘நட்பதிகாரம்-79’. ‘ஜெயம் சினி என்டர்டெயின்மென்ட்’ நிறுவனம் சார்பில் டி.ரவிக்குமார் தயாரித்துள்ள இப்படத்தில் ‘ஓநாயும் ஆட்டுக்குட்டியும்’ படத்தில் நடித்த ராஜ்பரத் கதாநாயகனாக நடித்துள்ளார். இன்னொரு நாயகனாக ‘வல்லினம்’ படத்தில் நடித்த அம்ஜத்கான் நடித்துள்ளார். கதாநாயகிகளாக ரேஷ்மி, தேஜஸ்வினி நடித்துள்ளார்கள். இவர்களுடன் எம்.எஸ்.பாஸ்கர், பஞ்சு சுப்பு, வினோதினி ஆகியோரும் நடித்துள்ளார்கள்.

இப்படம் குறித்து இயக்குனர் ரவிச்சந்திரனிடம் கேட்டபோது, ‘‘நான் இயக்கிய ‘மஜ்னு’ படத்தின் மூலம் ஹாரிஸ் ஜெயராஜை இசை அமைப்பாளராக அறிமுகப்படுத்தினேன். இப்படத்தின் அனைத்து பாடல்களும் சூப்பர் ஹிட்டானது. ‘கண்ணெதிரே தோன்றினாள்’ படத்தில் தேவா இசையில் அனைத்து பாடல்களும் ஹிட்டானது. அதே போல் தீபக் நிலம்பூர் இசையில் ‘நட்பதிகாரம்-79’ படத்தின் அனைத்து பாடல்களும் சிறப்பாக வந்துள்ளது. நான் அறிமுகப்படுத்திய ஹாரிஸ் ஜெயராஜை போல் தீபக் நிலம்பூரும் பெரிய இசை அமைப்பாளராக வருவார். இதில் கூடுதல் அம்சமாக இப்படத்திற்காக இசை அமைப்பாளர் தேவா ஒரு கானா பாடலை பாடியுள்ளார். இப்பாடலும் இந்த வருடத்தின் ஹிட் பாடல்களில் ஒன்றாக அமையும். ‘கண்ணெதிரே தோன்றினாள்’ நட்பையும், காதலையும் சொன்ன விதத்தில் அப்படம் பெரிய வெற்றி அடைந்தது, அதே போல் ‘நட்பதிகாரம்-79’ படத்தில் நட்பு, காதல், குடும்ப உறவுகள் பற்றி வேறு ஒரு பரிமாணத்தில் சொல்லி இருக்கிறேன். இப்படமும் மிகப் பெரிய வெற்றி பெறும்’’ என்றார். ‘நட்பதிகாரம்-79‘ படத்தின் பாடல்கள் இன்று மாலை வெளியாகவிருக்கிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

கருப்பன் - அழகழகாக பாடல் வீடியோ


;