ஜனாதிபதி விருது பெற்றவர் ஹீரோவாக நடிக்கும் படம்!

ஜனாதிபதி விருது பெற்றவர் ஹீரோவாக நடிக்கும் படம்!

செய்திகள் 16-Apr-2015 1:52 PM IST VRC கருத்துக்கள்

‘லட்சுமி அம்மாள் ஃபிலிம்ஸ்’ என்ற பட நிறுவனம் சார்பில் பி.செந்தில்முருகன் தயாரிக்கும் படம் ‘விருத்தாசலம்’. விருதகிரி என்ற பெயருடன் இப்படத்தின் தயாரிப்பாளர் செந்தில் முருகனே இப்படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார். இவர் கடலூர் மாவட்டம் விருத்தாசலம் வட்டத்தில் கச்சிராயநத்தம் என்ற கிராமத்தில் பஞ்சாயத்து தலைவராக இருந்தபோது அவரது சிறந்த நிர்வாகத்திற்காக ஜனாதிபதி பிரதீபா பாட்டிலிடம் விருது பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தில் மூன்று கதாநாயகிகளாக ஸ்வேதா, சமீரா, ஷெரீன் தாஹா ஆகியோர் நடிக்கிறார்கள். வில்லனாக சம்பத்ராம் நடிக்கிறார்.

இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கும் ரத்தன் கணபதி.
படம் குறித்து கூறும்போது, ‘‘ஒரு நாயகன், மூன்று கதாநாயகிகளை கொண்ட நான்கு முனை காதல் கதையாக உருவாக்கப்பட்டுள்ளது இப்பத்தின் திரைக்கதை. நாயகனின் மனதில் மறைந்து கிடக்கும் காதல் என்ன? யார் மீது..? எப்படி, ஏன் என்பதுதான் படத்தின் கதை. சிறுவன் விருத்தகிரி வாழ்வில் எதிர்பாராத ஒரு சம்பவம் நடக்கிறது. அதனால் சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் தூக்கி வீசப்படுகிறான். அவன் குற்றவாளியாக காரணம் என்ன? அங்கு அவன் யாரை சந்திக்கிறான். சீர்திருத்த பள்ளியில் சிறுவன் திருந்தினானா...அவன் வாழ்வில் என்ன நடந்தது என்பது போன்ற விஷயங்களை திரைக்கதை ஆக்கியிருக்கிறோம். ‘தேவர்மகன்’, ‘நாட்டாமை’, ‘என் ராசாவின் மனசிலே’, ‘பருத்திவீரன்’ போன்ற படங்களை போல முழுக்க முழுக்க கிராமத்து கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் படம். இந்த படத்தை முழுக்க முழுக்க விருதாச்சலதிலேயே படமாக்கப்பட்டுள்ளது’’ என்றார்.

இப்படத்திற்கு உமா சங்கர் – சிவநேசன் ஒளிப்பதிவு செய்ய, ஸ்ரீராம் இசை அமைத்துள்ளார். பாடல்களை இளைய கம்பன் எழுதியுள்ளார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

நெஞ்சம் மறப்பதில்லை - டீசர்


;