அஜித் படத்தில் நடிக்கிறேனா? - லட்சுமி மேனன்

அஜித் படத்தில் நடிக்கிறேனா? - லட்சுமி மேனன்

செய்திகள் 16-Apr-2015 12:48 PM IST VRC கருத்துக்கள்

‘வீரம்’ படத்தை தொடர்ந்து இயக்குனர் சிவாவும், அஜித்தும் இணையும் படத்தின் புஜை சமீபத்தில் சென்னயில் நடைபெற்றது. இப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக ஸ்ருதி ஹாசன் நடிக்கிறார் என்ற தகவல்கள் ஏற்கெனவே வெளியாகியுள்ளன. இப்படத்தின் கதைப்படி படத்தில் அஜித்துக்கு தங்கை கேரக்டர் ஒன்று வருகிறது! இந்த கேரக்டரில் பிந்து மாதவி நடிக்கிறார் என்று முதலில் பேசப்பட்டது. ஆனால் பிந்து மாதவி நடிக்கவில்லை என்பதை அவர் சைடிலிருந்து உறுதி செய்திருக்கிறார்கள். இதனை தொடர்ந்து அந்த தங்கச்சி கேரக்டருக்கு ஸ்ரீதிவ்யா, நித்யா மேனன் ஆகியோர் பெயர்கள் அடிப்பட்டது.

இந்நிலையில் இந்த கேரக்டருக்காக நடிகை லட்சுமி மேனனை தொடர்பு கொண்டிருக்கிறார்கள் அப்படக் குழுவினர்! ஆனால் லட்சுமி மேனன் படத்தின் கதையும், அதில் தன்னுடைய கேரக்டர் பற்றியும் தெரிந்த பிறகு நடிக்க ஒப்புக்கொள்வதாக கூறி இருக்கிறார். விரைவிலேயே லட்சுமி மேனனிடம் அவரது கேரக்டர் பற்றி விளக்க உள்ளார்களாம்! லட்சுமி மேனனிடம் சொல்லப்படும் கேரக்டர் அவருக்கு பிடிக்குமானால் அஜித்தின் தங்கையாக நடிக்க லட்சுமி மேனன் தயாராக உள்ளார். லட்சுமி மேனனை நாம் தொடர்பு கொண்டு பேசியபோது கிடைத்த தகவல்கள் தான் இது!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

'தல' பிடிக்கும் ஆனாலும் நான் 'தளபதி' ரசிகன் தான் - ஹரிஷ் கல்யாண்


;