ரசிகர்களுக்கு விக்ரமின் பிறந்தநாள் பரிசு!

ரசிகர்களுக்கு விக்ரமின் பிறந்தநாள் பரிசு!

செய்திகள் 16-Apr-2015 10:04 AM IST Chandru கருத்துக்கள்

‘ஐ’ ஏற்படுத்திய ஆச்சரியங்களில் இருந்தே இன்னும் மீள முடியாமல் சந்தோஷத்தில் திளைத்துக் கொண்டிருக்கின்றனர் ‘சீயான்’ விக்ரம் ரசிகர்கள். இப்போது அவர்களுக்கு மேலும் ஒரு இன்ப அதிர்ச்சி தரக் காத்திருக்கிறார் விக்ரம். ‘ஐ’ படத்தைத் தொடர்ந்து தற்போது ‘கோலி சோடா’ விஜய் மில்டன் இயக்கத்தில் ‘10 எண்றதுக்குள்ள’ படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார் அவர். இப்படத்தில் ஹீரோயினாக சமந்தா நடிக்க, இவர்களுடன் பசுபதி, ஜாக்கி ஷெராப், மனோபாலா, சம்பூர்ணேஷ் பாபு ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். தற்போது இப்படத்தின் இறுதிக்கட்ட வேலைகள் பரபரப்பாக நடந்து கொண்டிருக்கின்றன.

இந்நிலையில், நாளை (ஏப்ரல் 17) விக்ரமின் பிறந்தநாளை முன்னிட்டு இன்று இரவு சரியாக 12 மணி அளவில் ‘10 எண்றதுக்குள்ள’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிடத் திட்டமிட்டிருக்கிறார்களாம். ஆகவே... ‘சீயான்’ ரசிகர்களே இன்று இரவு கண்விழித்து விக்ரமிற்கு ‘ஹேப்பி பர்த்டே’ சொல்லி ‘10 எண்றதுக்குள்ள’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கையும் கண்டுகளியுங்கள்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

செம போத ஆகாதே - டிரைலர்


;