தன்ஷிகா நடிக்கும் ‘திறந்திடு சீசே’

தன்ஷிகா நடிக்கும் ‘திறந்திடு சீசே’

செய்திகள் 16-Apr-2015 9:45 AM IST VRC கருத்துக்கள்

இயக்குனர் ஷங்கரிடம் இணை இயக்குனராக பணியாற்றிய நிமேஷ் வர்ஷன் இயக்கி வரும் படம் ‘திறந்திடு சீசே’. சுதாஸ் புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் சார்பில் சுதா வீரவன் ஸ்டாலின் தயாரிக்கும் இப்படத்தில் அவரே கதாநாயகனாகவும் நடிக்கிறார். கதாநாயகியாக தன்ஷிகா நடிக்கிறார். இவர்களுடன் ‘சி.எஸ்.கே.’ படத்தில் வில்லனாக நடித்த நாராயணன், அஞ்சனா கீர்த்தி ஆகியோரும் நடிக்கிறார்கள். ஒவ்வொரு மனிதனும் ஒரு அலாவுதீன் விளக்கு போல! அவர்களுக்குள் இருக்கும் பூதம் அவ்வபோது வெளி வரும். அந்த தருணம் அவர்களை சுற்றி இருப்பவர்களுக்கு என்ன நன்மை, தீமைகள் நடக்கிறது என்பதை சுவாரசியம் நிறைந்த திருப்பங்களுடன் சொல்லும் படமாம் ‘திறந்திடு சீசே‘. இப்படத்தின் ஒளிப்பதிவை குளஞ்சி குமார் கவனிக்க, கணேஷ் ராகவேந்திரா இசை அமைக்கிறார். இப்படத்தின் வேலைகள் இறுதிகட்டத்தை எட்டியுள்ளது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

;