‘36 வயதினிலே’ படத்திற்கு ‘யு’ சான்றிதழ்

‘36 வயதினிலே’ படத்திற்கு ‘யு’ சான்றிதழ்

செய்திகள் 15-Apr-2015 5:29 PM IST Chandru கருத்துக்கள்

கிட்டத்தட்ட 8 வருடங்களுக்குப் பிறகு நடிகை ஜோதிகா நடித்திருக்கும் படம் ‘36 வயதினிலே’. மலையாளத்தில் வெளிவந்து ஹிட்டான ‘ஹவ் ஓல்ட் ஆர் யூ’ படத்தையே தமிழில் ஜோதிகா நடிக்க ‘36 வயதினிலே’வாக மாற்றியிருக்கிறார் இயக்குனர் ரோஸன் ஆன்ட்ரூஸ். சூர்யாவின் 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் முதல் தயாரிப்பாக இப்படம் வரும் விரைவில் திரைக்கு வரவிருக்கிறது.

சந்தோஷ் நாராயணின் இசையமைப்பில் உருவான பாடல்கள் சமீபத்தில் வெளிவந்து ரசிகர்களிடம் பலத்த வரவேற்பைப் பெற்றுள்ளது. இப்படத்திற்கு சென்சாரில் எந்தவித ‘கட்’டும் செய்யாமல் ‘யு’ சான்றிதழ் வழங்கப்பட்டிருக்கிறது. நாயகியை மையமாக வைத்து உருவாக்கப்பட்டிருக்கும் இப்படத்தின் மூலம் தமிழில் ஜோதிகா 2வது இன்னிங்ஸைத் தொடங்குகிறார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

நாச்சியார் - டீசர்


;