‘சூது கவ்வும்’ கூட்டணியின் அடுத்த படம்!

‘சூது கவ்வும்’ கூட்டணியின் அடுத்த படம்!

செய்திகள் 15-Apr-2015 2:52 PM IST Chandru கருத்துக்கள்

நலன் குமாரசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்து வெளிவந்த ‘சூது கவ்வும்’ படத்தை திருக்குமரன் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்தது. இப்படத்தை ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் வாங்கி அதனை பெரிய அளவில் விளம்ரபம் செய்து தமிழகமெங்கும் வெளியிட்டு வெற்றி வாகை சூடியது. இப்போது இதே கூட்டணி தங்களின் அடுத்த படத்திற்கும் தயாராகிவிட்டது.

இன்னும் பெயரிடப்படாத இப்படத்தை திருக்குமரன் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்க, ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் வழங்குகிறது. விஜய் சேதுபதி கதாநாயகனாகவும் மடோனா கதாநாயகியாகவும் நடிக்கின்றனர். இவர்களுடன் பல நட்சத்திரங்கள் நடிக்கும் இப்படத்தில் சமுத்திரகனி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றார். சந்தோஷ் நாராயணன் இசையமைக்க, தினேஷ் கிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்ய, லியோ ஜான்பால் படத்தொகுப்பை மேற்கொள்கிறார்.

இன்று முதல் இப்படத்தின் படபிடிப்பு சென்னையில் தொடங்கி தொடர்ந்து நகரின் முக்கிய இடங்களில் நடைபெற உள்ளது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

மாயவன் மேக்கிங் வீடியோ


;