‘காஞ்சனா 2’ லாரன்ஸைப் பாராட்டிய சூப்பர்ஸ்டார்!

‘காஞ்சனா 2’ லாரன்ஸைப் பாராட்டிய சூப்பர்ஸ்டார்!

செய்திகள் 15-Apr-2015 11:31 AM IST Chandru கருத்துக்கள்

ஏழு வயது முதல் எழுபது வயதுவரை வித்யாசமான வேடங்களில் ராகவா லாரன்ஸ் நடித்து இயக்கியுள்ள படம் ‘காஞ்சனா 2’. தமிழ், தெலுங்கு என இருமொழிகளில் உருவாகியுள்ள இப் படம் வரும் 17-ஆம் தேதி உலகம் முழுக்க வெளியாகிறது. சினிமா ரசிகர்களிடம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்ப்படுத்தியுள்ள இந்தப் படத்தில் 70 வயது கிழவியாக லாரன்ஸ் நடித்துள்ள புகைப்படங்கள் சமீபத்தில் இணையதளங்களிலும், பத்திரிகைகளிலும் வெளிவந்து பெரிய வரவேற்பைப் பெற்றது. அதோடு இப்படத்தில் 7வயது சிறுவனாகவும் நடித்து அசத்தியிருக்கிறாராம் லாரன்ஸ்.

அந்த வித்தியாசமான தோற்றத்தைப் பார்த்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்... ‘‘இப்படி ஒரு வித்தியாசமான கதாபாத்திரத்தில் நீ நடித்திருக்கிறாய். உனக்கு அந்த ராகவேந்திரர் ஆசி எப்போதும் உண்டு. இந்த படம் நிச்சயம் வெற்றிபெறும்!’’ என்று பாராட்டினாராம். தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் சேர்த்து ஆயிரத்திற்கும் மேற்ப்பட்ட திரையரங்குகளில் வெளியாகிறதாம் ‘காஞ்சனா 2’.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

2.௦ மேக்கிங் வீடியோ - பார்ட் II


;