‘புலி’ ஓபனிங் பாடலுக்கே 5 கோடியாம்!

‘புலி’ ஓபனிங் பாடலுக்கே 5 கோடியாம்!

செய்திகள் 15-Apr-2015 11:18 AM IST Chandru கருத்துக்கள்

விஜய் நடித்த படங்களிலேயே அதிக பொருட்செலவில் உருவாகி வரும் படம் ‘புலி’தான் என அதன் தயாரிப்பாளர்களாலேயே ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. மன்னர் காலம், டெக்னாலஜி யுகம் என இரண்டு காலகட்டங்களில் உருவாகி வருவதாக சொல்லப்படும் ‘புலி’ படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு வேலைகள் தற்போது பரபரப்பாக போய்க் கொண்டிருக்கின்றன. சென்னை ஈசிஆரில் பிரம்மாண்ட செட் போட்டு முதலில் படமாக்கப்பட்டது. பின்னர் கேரளாவில் உள்ள மலைப்பகுதிகளில் மலை கிராமம் போன்று செட் அமைக்கப்பட்டு படம் பிடித்தார்கள். இப்போது ஆந்திராவிலுள்ள தலக்கோணம் பகுதியில் ‘புலி’ படத்தின் ஷூட்டிங் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

விஜய்யும், 100 நடனக்கலைஞர்களும் இணைந்து ஆடும் ஓபனிங் பாடல் ஒன்றிற்காக கிட்டத்தட்ட 5 கோடி ரூபாய் செலவில் சூப்பர் செட் ஒன்றை இப்படத்திற்காக உருவாக்கியுள்ளாராம் ஆர்ட் டைரக்டர் முத்துராஜ். இந்த செட்டில் விஜய்யின் சூப்பரான நடனத்துடன் பாடல் ஒன்று படமாக்கப்பட்டு வருகிறதாம். இதுவரை பார்த்திராத வகையில் இப்பாடல் வித்தியாசமான ஒரு அனுபவத்தை ரசிகர்களுக்குத் தரும் என்கிறார் படத்தின் ஒளிப்பதிவாளர் ‘நட்டி’ நட்ராஜ்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

எமன் - டிரைலர்


;