‘அதிபர்’ ஆகிறார் நடிகர் ஜீவன்!

‘அதிபர்’ ஆகிறார் நடிகர் ஜீவன்!

செய்திகள் 15-Apr-2015 11:14 AM IST Top 10 கருத்துக்கள்

பெண் கண்ஸ்டோரிடியம் ஸ்டூடியோஸ் (பி) லிமிடெட் என்ற பட நிறுவனக்கும் புதிய படம் ஒன்றிற்கு ‘அதிபர்’ என பெயர் சூட்டப்பட்டுள்ளது. ‘மாயி’ புகழ் சூர்யபிரகாஷ் இப்படத்தை இயக்குகிறார். ஜீவன் கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தில் கதாநாயகியாக வித்யா நடிக்கிறார். மேலும் முக்கிய வேடங்களில் சமுத்திரக்கனி, ரஞ்சித், ரிச்சர்ட் ஆகியோர் நடிக்கிறார்கள். இவர்களுடன் தம்பி ராமையா, சிங்கமுத்து, ராஜ்கபூர், சரவணசுப்பையா உட்பட பலர் நடிக்கிறார்கள்.

பிலிப்ஸ் விஜயகுமார் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு இசையமைக்கிறார் விக்ரம்சிங்கா. இப்படம் குறித்து இயக்குனர் சூர்ய பிரகாஷ் பேசும்போது, ‘‘செத்தாலும் யாருக்கும் நம்பிக்கைத் துரோகம் செய்யமாட்டேன் என்று வாழ்க்கையை வகுத்துக் கொண்டு வாழும் சிவா கதாபாத்திரத்தில் ஜீவன். நம்பிக்கைத் துரோகத்தையே நிரந்தர தொழிலாகக் கொண்டு வாழ்ந்து கொண்டிருக்கும் ஈஸ்வரன் கதாபாத்திரத்தில் ரஞ்சித். இருவருக்குள்ளும் நடக்கும் போராட்டம்தான் கதை! படத்தின் பெரும்பகுதி படப்பிடிப்பு முடிவடைந்து விட்டது. சென்னை, பாண்டிச்சேரி, மலேசியா, பாங்காக், லங்காவி போன்ற இடங்களில் படப்பிடிப்பு நடைபெறுகிறது’’ என்றார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ஜெயிக்கிற குதிர - டிரைலர்


;