‘உத்தம வில்லனு’க்காக ஒன்று கூடிய திரையுலகம்!

‘உத்தம வில்லனு’க்காக ஒன்று கூடிய திரையுலகம்!

செய்திகள் 13-Apr-2015 8:27 PM IST Top 10 கருத்துக்கள்

சமீபகாலமாக பெரிய நட்சத்திரங்கள் நடித்த படங்கள் அல்லது பெரிய நிறுவனங்கள் தயாரித்த படங்கள் என்றால் அந்த படங்கள் ரிலீசாகிற நேரத்தில் ஏதாவது ஒரு பிரச்சனை எழுவது வாடிக்கையாகி விட்டது. இதற்கு சமீபத்திய உதாரணம் கார்த்தி நடித்த ‘கொம்பன்’. இந்த பட பிரச்சனையில் மொத்த திரையுலகினரும் ஒன்று சேர்ந்து அப்படத்தை குறித்த தேதியில் வெளியிட உதவினர்! அது போன்று இப்போது கமல்ஹாசனின் ‘உத்தம வில்லன்’ படத்திற்கும் சில பிரச்சனைகள் தோன்றியுள்ளது. ஒரு சில நாட்களுக்கு முன் சில சமூக அமைப்பினர் ‘உத்தம வில்லன்’ படம் குறித்து சில சர்ச்சைகளை எழுப்பியிருந்தனர். அந்த சர்ச்சைகளை அது சம்பந்தப்பட்டவர்களுடன் கலந்து பேசி சுமுகமாக் தீர்க்கப்பட்டு விட்டது. இந்நிலையில், ‘உத்தம வில்லன்’ படத்திற்கு மீண்டும் ஒரு பிரச்சனை எழுந்துளது. அது என்னவென்றால் மே 1-ஆம் தேதி ரிலீசாகவுள்ள ‘உத்தம வில்லன்’ படத்தை சுமுகமாக ரிலீஸ் செய்ய வேண்டுமென்றால் குறிப்பிட்ட ஒரு தொகையை தரவேண்டும் என்று கூறி ஒருவர் ‘உத்தம வில்லன்’ பட தயாரிப்பாளர் போஸுக்கு நெருக்கடி கொடுத்துள்ளார். இந்த விஷயம் குறித்து முடிவெடுக்க இன்று மாலை தமிழ் திரைப்பட உலகின் அனைத்து சங்களின் பிரதிநிதிகளும் ஃபிலிம் சேம்பரில் ஒன்று கூடினர். இந்தக் கூட்டத்தின் முடிவில் ‘உத்தம வில்லன்’ படத்தை குறித்த தேதியில் வெளியிட அனைத்து சங்கங்களும் முழு ஒத்துழைப்பு கொடுக்க தயாராக இருப்பதாக அறிவித்தனர். அத்துடன் இது போன்ற பிரச்சனைகள் மீண்டும் வருமேயானால் தமிழ் திரையுலகினர் அனைவரும் ஒன்று கூடி போராடும் என்றும் அறிவித்தனர். இதனால் ‘உத்தம வில்லன்’ படம் குறித்த தேதியில் திட்டமிட்டபடி ரிலீசாக இருக்கிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

அவள் - டிரைலர்


;