வீரப்பன் கதையை படமாக்கும் ராம்கோபால் வர்மா!

வீரப்பன் கதையை படமாக்கும் ராம்கோபால் வர்மா!

செய்திகள் 13-Apr-2015 3:59 PM IST VRC கருத்துக்கள்

பல உண்மை சம்பவங்களை அடிப்படையாக வைத்து படங்களை எடுத்துள்ள ராம்கோபால் வர்மா, அடுத்து சந்தனக் கடத்தல் வீரப்பன் என்கவுன்டரில் கொல்லப்பட்டது தொடர்பான ஒரு படத்தை இயக்கவுள்ளார். இதில் கன்னட நடிகர் சிவராஜ்குமார் வீரப்பனை சுட்டுகொன்ற போலீஸ்காரராக நடிக்கிறார். வீரப்பன் பாத்திரத்தில் நடிக்கும் நடிகருக்கான தேர்வு நடைபெற்றுவருகிறது. இந்த கதை முழுக்க வீரப்பனை பற்றிய கதையாக இருக்காதாம்! வீரப்பனை கொன்ற போலீஸ் காரரை பற்றியும் இப்படத்தில் விரிவாக சித்தரிக்க உள்ளாராம் ராம்கோபால் வர்மா! இந்த பத்தில் ஹீரோவாக நடிக்க சிவராஜ் குமாரை ராம்கோபால் வர்மா தேர்வு செய்ய காரணம், ஒரு சில அண்டுகளுக்கு முன் சிவராஜ்குமாரின் தந்தையும், நடிகருமான ராஜ்குமாரை வீர்ப்பன் கடத்திச் சென்று பல நாட்கள் காட்டுக்குள் வைத்திருந்தார். நாடே இந்த கடத்தல் சம்பவத்தை உற்று கவனித்தது. இந்த சம்பவம் ராஜ்குமார் குடும்பத்தினரை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அதனால் இப்படத்தில் வீரப்பனை கொல்லும் போலீஸ் அதிகாரி வேடத்திற்கு சிவராஜ்குமார் ரொம்பவும் பொருந்துவார் என்பதால்தான் அவரை நடிக்க வைக்க முடிவு செய்துள்ளாராம் ராம்கோபால் வர்மா! இப்போது இந்த படத்தின் ஸ்கிரிப்ட் வேலைகளில் பிசியாக இயங்கி வரும் ராம்கோபால் வர்மா, விரைவில் இப்படத்தின் படப்பிடிப்பை துவகவுள்ளாரம். இப்படம் தமிழ், தெலுங்கு, கன்னட மொழிகளில் உருவாக இருக்கிறதாம்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ரங்கூன் - டிரைலர்


;