’ஓ காதல் கண்மணி’ கதைக் கருவை வெளியிட்ட வைரமுத்து!

’ஓ காதல் கண்மணி’ கதைக் கருவை வெளியிட்ட வைரமுத்து!

செய்திகள் 13-Apr-2015 11:20 AM IST VRC கருத்துக்கள்

மணிரத்னம் இயக்கியுள்ள ‘ஓ காதல் கண்மணி’ படத்தின் ‘ஆடியோ சக்சஸ் மீட்’ சமீபத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கவிப்பேரரசு வைரமுத்து பேசும்போது, ‘‘மணிரதம் இயக்கிய ‘ரோஜா’ படத்திலிருந்து அவரது ‘ஓ காதல் கண்மணி’ படம் வரையில் கடந்த 23 ஆண்டுகளாக நானும் மணிரத்னமும், ஏ.ஆர்.ரஹ்மானும் இணைந்து பயணித்து வருகிறேன்.

மணிரத்னத்தின் 24-ஆவது படம் ‘ஓ காதல் கண்மணி’. 24 படங்கள் தானா என்று தயாரிப்பு கணக்கு பார்த்தால் அது குறைவு தான்! ஆனால் தர எண்ணிக்கையில் கணக்கு பார்த்தால் அது அதிகம் தான்! 24 படங்களிலும் 24 விதமான அனுபவங்களை திரை ரசிகர்களுக்கு மணிரத்னம் தந்திருக்கிறார். இந்த படத்தின் கதை, இந்திய சமூகத்தில் ஒரு கலாச்சார அதிர்ச்சியை ஏற்படுத்தும். இந்த கலாச்சார அதிர்ச்சியை கலைஞர்கள் உருவாக்குகிறார்களா? சமூகம் உருவாக்குகிறதா எனப்து மிகப் பெரிய கேள்வி! ஒரு திரைக்கலைஞன் சமூக கலாச்சார அதிர்ச்சியை உண்டாக்க முடியும். ஆனால் அவன் ஒரு வணிக எல்லைக்குள் சிக்கி கொண்டிருக்கிறான். என்னை போன்ற படைப்பாளன் சமூக கலாச்சார எழுச்சியை தனது எழுத்தின் மூலம் உண்டாக்க முடியும். அதுக்கு வணிக எல்லை கிடையாது! ஆனால் ஒரு திரைக்கலைஞன் அதே கலாச்சார அதிர்ச்சியை திரையில் கொண்டு வருவதற்கு பல கோடிகள் முதலீடு செய்ய வேண்டும். அந்த கலாச்சர அதிர்ச்சி வணிக ரீதியாகவும் ஒப்புக்கொள்ளப்பட்டல் அவன் தப்பிப்பான். இல்லையென்றால் கஷ்டம் தான்! இதையெல்லாம் தாண்டி ஒரு பரிசோதனை முயறிசியாக இப்படத்தை இயக்கியிருக்கிறார் மணிரத்னம். இன்னும் ஒரு 50 ஆண்டுகளில் திருமணம் எனும் ஒரு நிறுவனம் இருக்குமா என்பது ஒரு பெரிய கேள்வியாக இருக்கும். இந்த படம் அதற்கு விளக்கம் தரும் படமாக இருக்கும்’’ என்றார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

2.௦ மேக்கிங் வீடியோ - பார்ட் II


;