ஒரு ஆக்ஷன், ஒரு சென்டிமென்ட் - ‘தல’யின் சூப்பர் பிளான்!

ஒரு ஆக்ஷன், ஒரு சென்டிமென்ட் - ‘தல’யின் சூப்பர் பிளான்!

செய்திகள் 13-Apr-2015 10:40 AM IST Chandru கருத்துக்கள்

‘கிரீடம்’ படத்திற்குப் பிறகு பில்லா, ஏகன், அசல், மங்காத்தா, பில்லா 2 என வரிசையாக துப்பாக்கியும் கையுமாக சுற்றிக் கொண்டிருந்த ‘தல’ அஜித் ஒரு மாறுதலுக்காக ‘இங்கிலீஷ் விங்கிலீஷ்’ படத்தில் ஸ்ரீதேவியுடன் கெஸ்ட் ரோல் ஒன்றில் நடித்தார். தமிழில் வெளியான இந்த ஹிந்தி படத்திற்கு அஜித் நடித்திருந்ததால் பெரிய வரவேற்பு கிடைத்தது. அதன்பிறகு ‘ஆரம்பம்’ என்ற ஆக்ஷன் படத்திலும், ‘சிறுத்தை’ சிவா இயக்கத்தில் ‘வீரம்’ என்ற சென்டிமென்ட் படத்திலும் நடித்தார் அஜித்.

அந்த வரிசையில் ‘வீரம்’ படத்தைத் தொடர்ந்து கௌதம் மேனன் இயக்கத்தில் ‘என்னை அறிந்தால்’ படம் அஜித் போலீஸாக நடிக்க ஆக்ஷன் தாமாக்காவாக உருவாகி வெளியானது. இப்படத்தைத் தொடர்ந்து தற்போது மீண்டும் சிவா இயக்கத்தில் நடிக்கிறார் அஜித். இப்படத்தில் ஆக்ஷன் இருந்தாலும் ‘வீரம்’ படத்தைப்போல குடும்ப சென்டிமென்ட் காட்சிகளும் நிறைந்திருக்குமாம். அனேகமாக இப்படம் ‘தங்கச்சி சென்டிமென்ட்’டை மையமாக வைத்து உருவாக்கப்படும் எனத் தெரிகிறது. அஜித்தின் தங்கை கேரக்டருக்காக பிந்து மாதவியின் பெயர் ஆரம்பத்தில் பரீசீலிக்கப்பட்டது. அவர் அந்த கேரக்டரில் நடிக்கவில்லை என்பதால், தற்போது அவருக்குப் பதிலாக ஸ்ரீதிவ்யா, நித்யா மேனன் ஆகியோரின் பெயர்கள் பரிசீலிக்கப்பட்டு வருகிறதாம்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

‘‘அரசியலில் ரஜினியைவிட கமலுக்கே என் ஆதரவு!’’ - நடிகர் ஆர்.கே.சுரேஷ்


;