’கோ-2’வில் இணையும் பாபி சிம்ஹா, நிக்கி கல்ராணி!

’கோ-2’வில் இணையும் பாபி சிம்ஹா, நிக்கி கல்ராணி!

செய்திகள் 13-Apr-2015 10:19 AM IST VRC கருத்துக்கள்

ஒரு சில வெற்றிப் படங்களை தயாரித்து வெளியிட்டுள்ள ‘ஆர். எஸ். இன்ஃபோடெயின்மென்ட்’ நிறுவனம் தங்களது முந்தைய ‘கோ’ திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து அதன் இரண்டாம் பாகத்தை தயாரிக்க திட்டமிட்டுள்ளனர். இது குறித்து இந்நிறுவனத்தின் அதிபர் எல்ரெட் குமார் கூறும்போது,

“கோ’ படத்தின் இரண்டாம் பாகம் எடுக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்து வந்தது. விஷ்ணு வர்தன், சக்ரி டோலெட்டி ஆகியோரிடம் உதவி இயக்குனராக பணி புரிந்துள்ள சரத் சொன்ன ஒரு கதையை கேட்க நேர்ந்தது. கதையை கேட்டதும் அந்த கதை பிடித்திருந்தது. அதனை தயாரிக்க முடிவு செய்தோம். ஒரு படத்தின் ‘Sequel’ என்றால் அதே குழு, மற்றும் நடிகர்கள் நடிக்க வேண்டும் என்றில்லாமல் அந்தக் கதை ‘கோ’ படத்தலைப்புக்கு ஏற்றவாறு இருந்தது. அதனால் அந்த கதையை ‘கோ-2’ என்ற பெயரில் தயாரிக்கிறோம். இந்த கதையின் கதாபாத்திரத்திற்கு பாபி சிம்ஹா கனகச்சிதமாக பொருந்தியுள்ளார். அதனால் அவரை இதில் நடிக்க வைக்கிறோம். அவருக்கு ஜோடியாக நிக்கி கல்ராணி நடிக்கிறார். மேலும் பிரகாஷ் ராஜ் முக்கிய வேடத்தில் நடிக்க உள்ளார். மற்ற நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களின் தேர்வு நடந்து வருகிறது. விரைவில் இப்படத்தின் படப்பிடிப்பை துவங்க உள்ளோம்’’ என்றார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தானா சேர்ந்த கூட்டம் - சொடக்கு பாடல் டீசர்


;