விஜய்யின் ‘புலி’யில் திடீரென நுழைந்த நந்திதா!

விஜய்யின் ‘புலி’யில் திடீரென நுழைந்த நந்திதா!

செய்திகள் 13-Apr-2015 10:19 AM IST Chandru கருத்துக்கள்

சிம்புதேவன் இயக்கத்தில் விஜய் நடிக்கும் ‘புலி’ படத்தின் இறுதிக்கட்ட வேலைகள் தற்போது பரபரப்பாக போய்க் கொண்டிருக்கின்றன. பி.டி.செல்வகுமார், ஷிபு தமீன்ஸ் இணைந்து தயாரிக்கும் இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக ஹன்சிகாவும், ஸ்ருதிஹாசனும் நடிக்கிறார்கள். இப்போது இப்படத்தில் நடிகை நந்திதாவும் இணைந்திருக்கிறார். படத்தின் முக்கியமான கேரக்டர் ஒன்றில் நடிக்கும் நந்திதாவிற்கான படப்பிடிப்பு விரைவில் துவங்குமாம்.

சென்னை, கேரளா உள்ளிட்ட இடங்களில் படப்பிடிப்பை முடித்துவிட்டு தற்போது ஆந்திராவிலுள்ள தலக்கோணம் பகுதியில் ‘புலி’ டீம் முகாமிட்டிருக்கிறது. தேவி ஸ்ரீ பிரசாத் இசை, நட்ராஜின் ஒளிப்பதிவு என படத்தின் வேலைகள் புலி பாய்ச்சலில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. விரைவில் ஃபர்ஸ்ட் லுக் வெளிவரும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ஸ்கெட்ச் - டீசர்


;