பிரம்மாண்டமாக ரிலீஸாகும் ‘ஓ காதல் கண்மணி‘

பிரம்மாண்டமாக ரிலீஸாகும் ‘ஓ காதல் கண்மணி‘

செய்திகள் 11-Apr-2015 5:05 PM IST Chandru கருத்துக்கள்

மணிரத்னம் இயக்கத்தில் துல்ஹர் சல்மான், நித்யா மேனன் நடித்திருக்கும் ‘ஓ காதல் கண்மணி’ படம் வரும் 17ஆம் தேதி ரிலீஸாகிறது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையில், பி.சிஸ்ரீராமின் ஒளிப்பதிவில் உருவாகியிருக்கும் இப்படத்திற்கு சென்சாரில் யு/ஏ சான்றிதழ் கிடைத்துள்ளது. மேலைநாட்டு கலாச்சாரத்தின் தாக்கத்தில் நமது நவநாகரீக இளைஞர்களும் ‘லிவிங் டுகெதர்’ எனும் வாழ்க்கை முறையை தேர்ந்தெடுத்திருப்பதை மையமாக வைத்தே இப்படத்தின் திரைக்கதையை உருவாக்கியிருக்கிறாராம் மணிரத்னம். அதனாலேயே படத்திற்கு யு/ஏ சான்றிதழ் கிடைத்துள்ளதாம்.

முதல்முறையாக மணிரத்னத்தின் இப்படத்தை ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் வாங்கி வெளியிடுகிறது. தமிழகத்தில் மட்டும் ‘ஓ காதல் கண்மணி’ படத்தை கிட்டத்தட்ட 350 திரையரங்குகளில் வெளியிடத் திட்டமிட்டிருக்கிறார்களாம். பாடல்கள், டிரைலருக்கு கிடைத்த பெரிய வரவேற்பைத் தொடர்ந்தே இப்படம் பிரம்மாண்டமாக ரிலீஸ் செய்யப்படுகிறதாம்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தானா சேர்ந்த கூட்டம் - சொடக்கு பாடல் டீசர்


;