நாலு பேரு நாலு விதமா பேசுவாங்க!

நாலு பேரு நாலு விதமா பேசுவாங்க!

செய்திகள் 11-Apr-2015 12:26 PM IST VRC கருத்துக்கள்

‘ஸ்ரீகிருஷ்ணா டாக்கீஸ்’ தயாரிப்பில் அறிமுக இயக்குனர் மாதவன் இயக்கும் படம் ‘நாலு பேரு நாலு விதமா பேசுவாங்க’ . ஒவ்வொரு மனிதனின் சூழ்நிலை மற்றவர்களுக்கு எவ்வளவு நகைச்சுவையாய் இருக்கக் கூடும் என்பதை நகைச்சுவையாக சொல்லும் படமே ‘நாலு பேரு நாலு விதமா பேசுவாங்க’. இப்படத்தில் அறிமுகம் இந்திரஜித் ஹீரோவாக நடிக்க, தேவிகா மாதவன் கதாநாயகியாக நடிக்கிறார். இவர்களுடன் சிங்கமுத்து, சுவாமிநாதன், நடன இயக்குனர் சிவசங்கர் ஆகியோரும் நடிக்கிறார்கள்.

இப்படத்திற்கு டி.எஸ்.வாசன் ஒளிப்பதிவு செய்ய, ரிஷால் சாய் இசையமைக்கிறார். இப்படத்தின் அனைத்து பாடல்களையும் யுகபாரதி எழுதியுள்ளார். இப்படம் விரைவில் வெளியாக உள்ளது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

இந்திரஜித் - ட்ரைலர்


;