சற்குணம் இயக்கத்தில் கௌதம் கார்த்திக்!

சற்குணம் இயக்கத்தில் கௌதம் கார்த்திக்!

செய்திகள் 11-Apr-2015 11:06 AM IST VRC கருத்துக்கள்

கௌதம் கார்த்திக் நடித்துள்ள ‘வை ராஜா வை’ படம் வருகிற மே 1-ஆம் தேதி ரிலீசாகிறது. இப்படத்தை தொடர்ந்து சற்குணம் இயக்கும் படத்தில் நடிக்க இருக்கிறார் கௌதம் கார்த்திக் என்று கூறப்படுகிறது. சற்குணம் தற்போது இயக்குனர் பாலா தயாரிப்பில் ‘சண்டிவீரன்’ என்ற படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தின் வேலைகள் முடிந்ததும் கௌதம் கார்த்திக்கை வைத்து இயக்கும் படத்தின் வேலைகளை துவங்க இருக்கிறாராம் சற்குணம். சரவணன் இயக்கத்தில் கௌதம் கார்த்திக் ‘சிப்பாய்’ என்ற படத்தில் நடித்து வந்தார். கௌதம் கார்த்திக்குடன் லட்சுமி மேனன் ஜோடியாக நடிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு இன்னும் முடியவில்லை என்று கூறப்படுகிறது. சற்குணம், கௌதம் கார்த்திக் இணையும் பட விவரங்களை இன்னும் அதிகாரபூர்வமாக அறிவிக்கவில்லை!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

‘வை ராஜா வை’ உருவான விதம் - வீடியோ


;