மணிரத்னம் - ஏ.ஆர்.ரஹ்மான் கூட்டணியின் சூப்பர் சாதனை!

மணிரத்னம் - ஏ.ஆர்.ரஹ்மான் கூட்டணியின் சூப்பர் சாதனை!

செய்திகள் 10-Apr-2015 4:12 PM IST Chandru கருத்துக்கள்

வரும் 17ஆம் தேதி வெளியாகவிருக்கும் மணிரத்னத்தின் ‘ஓ காதல் கண்மணி’ படத்தின் டிரைலர் சத்தமில்லாமல் சாதனை ஒன்றை படைத்திருக்கிறது. ஆம்... ஷங்கர் & விக்ரம், ரஜினி, அஜித்&கௌதம் மேனன் படங்களுக்குப் பிறகு அந்த சாதனை செய்த ஒரே தமிழ்ப்படமும் மணியின் ‘ஓ காதல் கண்மணி’ மட்டுமே. இத்தனைக்கும் மேற்கண்ட படங்களில் பிரபல நாயகர்கள் நடித்திருந்ததும் அந்த சாதனை படைக்கப்பட்டதற்கு இன்னொரு காரணம். ஆனால், மணிரத்னத்தின் ‘ஓ காதல் கண்மணி’யின் ஹீரோவும், ஹீரோயினும் அவ்வளவு பிரபலமானவர்கள்கூட இல்லை. ஆனாலும் சாதித்திருக்கிறது ‘ஓ காதல் கண்மணி’.

‘அட... அப்படி என்னதான்யா சாதித்திருக்கிறது’ என்கிறீர்களா...? மார்ச் 1ஆம் தேதி ‘ஓ காதல் கண்மணி’யின் டிரைலர் யு டியூப்பில் வெளியிடப்பட்டது. வெளியான ஒரு சில மணி நேரங்களிலேயே இந்த டிரைலருக்கு பெரிய வரவேற்பு கிடைத்தது. ஒரு சில நாட்களிலேயே 20 லட்சம் பார்வைகளையும் கடந்தது இந்த டிரைலர். இப்போது இந்த டிரைலர் வெளியாகி 40 நாட்கள் ஆகியிருக்கும் நிலையில், இதுவரை 40 லட்சத்திற்கும் மேற்பட்டோர் இந்த டிரைலரை கண்டுகளித்துள்ளனர். கோச்சடையான், ஐ, லிங்கா, என்னை அறிந்தால் படங்களுக்குப் பிறகு 40 லட்சம் பார்வையாளர்களைக் கடந்த ஒரே தமிழ்ப்படம் ‘ஓ காதல் கண்மணி’ மட்டுமே.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

காற்று வெளியிடை - படத்தின் சிறு முன்னோட்ட காட்சிகள்


;