பிரசாந்துக்கு ஜோடியாகும் ஆஸ்திரேலிய அழகி!

பிரசாந்துக்கு ஜோடியாகும் ஆஸ்திரேலிய அழகி!

செய்திகள் 10-Apr-2015 4:05 PM IST VRC கருத்துக்கள்

பிரசாந்த் நடித்து வரும் படம் ‘சாஹசம்’. அறிமுக இயக்குனர் அருண்ராஜ் வர்மா இயக்கி வரும் இப்படத்தில் பிரசாந்துக்கு ஜோடியாக ஆஸ்திரேலியாவை சேர்ந்த அழகி அமன்டா நடித்து வருகிறார். ‘சாஹசம்’ படம் ஆடல், பாடல் ஆகியவற்றுகு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்பட்டு வரும் படமாம்! இதனால் நல்ல அழகும், நடன திறமையும், நடிப்பு திறமையும் உள்ள ஒருவரை தேடி வந்தனர் ‘சாஹசம்’ படக்குழுவினர். கடந்த எட்டு மாதங்களாக நடந்து வந்த தேடுதல் வேட்டையில் கடைசியாக சிக்கியவர் தான் இந்த ஆஸ்திரேலிய அழகி அமன்டா! மும்பையை சேர்ந்த அம்மாவுக்கும், இங்கிலாந்து நாட்டை சேர்ந்த அப்பாவுக்கும் பிறந்தவர் அமன்டா! ஆனால் அமன்டா பிறந்து வளர்ந்தது எல்லாம் ஆஸ்திரேலியாவில் தான்! நல்ல அழகும், நடிப்பு திறனும், நடனம் தெரிந்தவருமான அமன்டா இப்படத்தின் மூலம் இந்திய சினிமாவில் அறிமுகமாகிறார்.

‘சாஹசம்’ படத்தில் பிரசாந்துடன் ஹாலிவுட் நடிகை நர்கிஸ் ஃபக்ரி ஏற்கெனவே ஒரு நடனம் ஆடியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. ‘ஸ்டார் மூவீஸ்’ நிறுவனம் சார்பில் பிரசாந்தின் தந்தையும், நடிகருமான தியாகராஜன் தயாரித்து வரும் இப்படத்தில் பிரசாந்த், அமன்டாவுடன் நாசர், தம்பி ராமையா, சோனுசூட், எம்.எஸ்.பாஸ்கர், ஜான் விஜய், துளசி, தேவதர்ஷினி மற்றும் பலர் நடித்து வருகின்றனர். எஸ்.எஸ்.தமன் இசை அமைக்கிறார். படப்பிடிப்பு முடியும் கட்டத்தில் இருக்கும் இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா விரைவில் நடைபெறவிருக்கிறது. இதனை தொடர்ந்து படத்தை விரைவில் திரைக்கு கொண்டுவரவும் திட்டமிட்டுள்ளனர் ‘சாஹசம்’ படக்குழுவினர்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

எமன் - டிரைலர்


;